உலக செய்திகள்

தாய்லாந்து: இளம்பெண்களுடன் உல்லாசம் மன்னருக்கு எதிராக வெடித்த போராட்டம் + "||" + Thai republic hashtag trends as frustration surges among protesters

தாய்லாந்து: இளம்பெண்களுடன் உல்லாசம் மன்னருக்கு எதிராக வெடித்த போராட்டம்

தாய்லாந்து: இளம்பெண்களுடன் உல்லாசம் மன்னருக்கு எதிராக வெடித்த போராட்டம்
எப்போது பார்த்தாலும் அழகிய இளம்பெண்களுடன் வெளிநாடுகளிலேயே நேரத்தை செலவிடும் தாய்லாந்து மன்னருக்கு எதிராக போராட்டம் வெடித்துள்ளது.
பாங்காக்

தாய்லாந்தின் மன்னர் மகா வஜ்ரலோங்கார்னை ஒரு பிளேபாய் என்றே கூறலாம். பழங்கால மன்னர் கதைகளில் வருவதுபோல, அந்தப்புரம் நிறைய இளம்பெண்கள், பார்க்கும் அழகான பெண்களையெல்லாம் சொந்தமாக்கிக் கொள்வது என வாழ்ந்து வருபவர் அவர். உலக வரலாற்றிலேயே இதுவரை இல்லாத நிகழ்வாக சட்டப்பூர்வமாக மனைவிக்கு போட்டியாக இளம்பெண் ஒருவரை மக்கள் முன்னிலையில் தனக்கு சொந்தமாக்கிக்கொண்டவர்.

அத்துடன் நாடே கொரோனாவில் தத்தளிக்கும் நிலையில், ஜெர்மனியில் ஒரு ஆடம்பர ஓட்டலில் தன்னை மகிழ்விப்பதற்காகவே அமைக்கப்பட்ட ஒரு பெண்கள் படையுடன் தங்கியிருந்தார் அவர்.

எப்போதும் வெளிநாட்டிலேயே வாழும் மன்னர் நமக்குத் தேவையா என மக்கள் குரல் கொடுத்துக்கொண்டிருக்கும் வேளையில், நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்பதற்காக தாய்லாந்து சென்றிருந்தார் வஜ்ரலோங்கார்ன்.

இதற்கிடையில் மன்னருக்கு எதிராக போராட்டங்களில் ஈடுபட்டு வருகிறார்கள் மக்கள். அரசியல் சாசனத்தை அமுல்படுத்துவது முதல் மன்னருடைய அதிகாரங்களை குறைப்பது வரை பல்வேறு காரணங்களுக்காக ஆயிரக்கணக்கானோர் கூடி போராட்டங்களில் ஈடுபட்டு வருகிறார்கள்.

இரண்டு மாதங்களுக்கும் மேலான அரசாங்க எதிர்ப்பு ஆர்ப்பாட்டங்களின் போது, சில எதிர்ப்புத் தலைவர்கள் மன்னர் மகா வஜ்ரலோங்கார்னின் அதிகாரங்களைக் குறைப்பதற்காக சீர்திருத்தங்களை நாடுவதாகக் கூறியுள்ளனர், ஆனால் தாய்லாந்தை குடியரசாக மாற்றக்கூடாது என்று கூறியுள்ளனர்.

#RepublicofThailand என்ற ஹேஷ்டேக் தாய்லாந்தில் டுவிட்டரில் பிரபலமாகி வருகிறது.பெண்களின் மேலாடை போல் ஒன்றை அணிந்து வெளிநாடு ஒன்றில் உலாவந்த மன்னரை கேலி செய்யும் வண்ணம் அதேபோன்ற உடைகளை அணிந்து ஆண்கள் போராட்டங்களில் பங்கேற்றனர்.ஆனால், தாய்லாந்தைப் பொருத்தவரை மன்னரை விமர்சிப்பவர்களுக்கு 15 ஆண்டுகள் வரை சிறைத்தண்டனை என்னும் பயங்கர சட்டம் இருப்பதால், இதுவரை அவர் பாதுகாக்கப்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது.

அரசாங்க செய்தித் தொடர்பாளர் அனுச்சா புரபச்சாய்ஸ்ரி, இந்த ஹேஷ்டேக்கைப் பார்க்கவில்லை என்றும் கருத்து தெரிவிக்க மறுத்துவிட்டார். பிரதமர் பிரயுத் சான்-ஓச்சா இந்த ஹேஷ்டேக் குறித்து எந்த கருத்தும் தெரிவிக்கவில்லை, ஆனால் செய்தியாளர்களிடம் தேசிய பாதுகாப்பு மிக முக்கியமானது என்றும் சட்டத்தை மீறினால் எதிர்ப்பாளர்கள் மீது வழக்குத் தொடரப்படும் என்றும் கூறினார்.

தொடர்புடைய செய்திகள்

1. துணைவியை மன்னித்து தனது அழகிகள் குழுவினருடன் இணைந்து கொள்ள தாய்லாந்து மன்னர் உத்தரவு
தாய்லாந்தில் சிறை வைக்கப்பட்டிருந்த தமது துணைவிக்கு மன்னிப்பு வழங்கி, ஜெர்மனியில் தனது அழகிகள் குழுவினருடன் இணைந்து கொள்ள உத்தரவு பிறப்பித்துள்ளார் தாய்லாந்து மன்னர்.
2. பெய்ரூட் வெடிவிபத்து: மக்கள் போராட்டம் எதிரொலி: லெபனான் அரசு பதவி விலகுவதாக பிரதமர் ஹாசன் அறிவிப்பு
பெய்ரூட் வெடிவிபத்து சம்பவத்தில் மக்கள் நடத்திய போராட்டம் எதிரொலியாக, லெபனான் அரசு பதவி விலகுவதாக அந்நாட்டு பிரதமர் ஹாசன் அறிவித்துள்ளார்.