உலகைச் சுற்றி...


உலகைச் சுற்றி...
x
தினத்தந்தி 27 Sep 2020 9:45 PM GMT (Updated: 27 Sep 2020 7:56 PM GMT)

ரஷிய தலைநகர் மாஸ்கோவின் புறநகர் பகுதியில் 4 மீட்டர் உயரம் கொண்ட நடை பாலம் ஒன்று இடிந்து விழுந்ததில் 25 பேர் படுகாயமடைந்தனர்.

* அஜர்பைஜான் மற்றும் அர்மீனியா நாடுகளுக்கு இடையே மோதல் வெடித்துள்ளது. இரு நாடுகளின் எல்லையில் இரு தரப்பு ராணுவமும் பரஸ்பர மோதலில் ஈடுபட்டு வருகிறது. இதனால் அங்கு பதற்றம் நிலவுகிறது.

* லெபனான் நாட்டின் வடக்குப் பகுதியிலுள்ள எலன்ஷ்ரா மாகாணத்தில் ராணுவ வீரர்களுக்கும் பயங்கரவாதிகளுக்கும் இடையே நடந்த மோதலில் 13 பயங்கரவாதிகள் கொன்று குவிக்கப்பட்டனர்.

* லிபியாவின் மேற்குப் பகுதியிலுள்ள கடற்கரை நகரமான அல் கோம்சில் அகதிகளை ஏற்றிச் சென்ற படகு ஒன்று கடலில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் 3 பேர் சம்பவ இடத்திலேயே பலியாகினர். நீரில் தத்தளித்துக் கொண்டிருந்த 22 அகதிகளை லிபிய கடலோரக் காவல்படையினர் பத்திரமாக மீட்டனர்.

* அமெரிக்காவில் நவம்பர் மாதம் நடைபெறவிருக்கும் ஜனாதிபதித் தேர்தலில் தன்னை வெற்றிபெறச் செய்தால் போலீஸ் துறையில் சீர்திருத்தம் கொண்டு வருவதோடு சட்ட அமலாக்க நடவடிக்கைகளை கண்காணிக்க தேசிய ஆணையம் ஒன்றையும் அமைப்பேன் என ஜனநாயக கட்சி வேட்பாளர் ஜோ பைடன் உறுதியளித்துள்ளார்.

* ஜப்பானின் ஷிசுவோகா பிராந்தியத்தில் நேற்று சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. இது ரிக்டர் அளவுகோலில் 5.3 புள்ளிகளாக பதிவானது. இந்த நிலநடுக்கத்தால் ஏற்பட்ட சேத விவரங்கள் குறித்து தகவல்கள் இல்லை.

* ரஷிய தலைநகர் மாஸ்கோவின் புறநகர் பகுதியில் 4 மீட்டர் உயரம் கொண்ட நடை பாலம் ஒன்று இடிந்து விழுந்ததில் 25 பேர் படுகாயமடைந்தனர்.

Next Story