உலக செய்திகள்

அமெரிக்க அதிபரின் ஆலோசகருக்கு கொரோனா பாதிப்பு + "||" + US President Donald Trump undergoes Covid-19 test after close aide Hope Hicks tests positive

அமெரிக்க அதிபரின் ஆலோசகருக்கு கொரோனா பாதிப்பு

அமெரிக்க அதிபரின் ஆலோசகருக்கு கொரோனா பாதிப்பு
அமெரிக்க அதிபர் டிரம்பின் ஆலோசகருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது.
வாஷிங்டன்,

அமெரிக்கா அதிபர் டொனால்டு டிரம்பின் நெருங்கிய ஆலோசகர் ஹோப் ஹிக்ஸ் என்பவருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதையடுத்து,  அதிபர் டிரம்ப் மற்றும் அவரது மனைவி மெலனியா டிரம்ப் ஆகிய இருவருக்கும் கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டுள்ளது. 

தனக்கு கொரோனா பரிசோதனை செய்யப்பட்டதை தொலைக்காட்சிக்கு அளித்த பேட்டியில் உறுதி செய்த டிரம்ப், “ தற்போதுதான் நான் கொரோனா பரிசோதனை செய்து கொண்டுள்ளேன். முடிவுகள் எப்படி வருகிறது என நாம் பார்ப்போம்” என தெரிவித்துள்ளார்.

அமெரிக்க அதிபர் தேர்தலுக்காக அனல் பறக்கும் பிரசாரத்தில் டிரம்ப் ஈடுபட்டுள்ளார். இதற்காக பல்வேறு இடங்களுக்கு டிரம்ப்  பயணம் மேற்கொண்டு வரும் நிலையில்,  ஆலோசகர் ஹிக்ஸும் டிரம்புடன் சென்று வந்துள்ளார்.  


தொடர்புடைய செய்திகள்

1. அத்துமீறி கடல் எல்லைக்குள் நுழைந்த அமெரிக்க போர்க்கப்பலை விரட்டி அடித்த ரஷிய போர்க்கப்பல்
அத்துமீறி தங்களது கடல் எல்லைக்குள் நுழைந்த அமெரிக்க போர்க்கப்பலை ரஷிய போர்க்கப்பல் துரத்திச் சென்ற விரட்டித்ததாக அந்நாட்டு பாதுகாப்பு அமைச்சகம் தெரிவித்துள்ளது.
2. அமெரிக்க கடற்படை அதிகாரி தைவானுக்கு திடீர் பயணம்?
அமெரிக்க கடற்படை அதிகாரி, முன் அறிவிப்பு இன்றி தைவானுக்கு திடீர் பயணம் மேற்கொண்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
3. போயிங் 737 மேக்ஸ் விமானங்கள்: 20 மாதங்களாக நீடித்த தடை முடிவுக்கு வந்தது
எத்தியோப்பியாவில் ‘போயிங் 737 மேக்ஸ் 8’ ரக விமானம் கடந்த ஆண்டு மார்ச் 10ம் தேதி விபத்துக்குள்ளானதில் இந்தியர்கள் உள்பட 157 பேர் உயிரிழந்தனர். முன்னதாக இதே ரக விமானம் இந்தோனேசியாவில் 2018ம் ஆண்டு அக்டோபர் 29ம் தேதி விபத்துக்குள்ளானதில் 189 பேர் பலியாகினர்.
4. டிரம்ப் எங்களுடன் ஒத்துழைக்காவிட்டால் கொரோனாவால் உயிரிழப்போர் எண்ணிக்கை அதிகரிக்கும் ஜோ பைடன் எச்சரிக்கை
டொனால்டு டிரம்ப் எங்களுடன் ஒத்துழைக்காவிட்டால் கொரோனாவால் உயிரிழப்போர் எண்ணிக்கை அதிகரிக்கும் என புதிதாக தேர்ந்து எடுக்கப்பட்ட ஜோ பைடன் எச்சரிக்கை விடுத்து உள்ளார்.
5. அமெரிக்காவில் படிக்கும் இந்திய மாணவர்களின் எண்ணிக்கை கணிசமாக குறைந்து உள்ளது
அமெரிக்காவில் படிக்கும் இந்திய மாணவர்களின் எண்ணிக்கை 4.4 சத்வீதம் குறைந்து உள்ளது என அறிக்கை ஒன்று சுட்டிக்காட்டுகிறது.