"டிரம்ப், மெலனியா விரைவில் நலம்பெற பிரார்த்திக்கிறேன்"- ஜோபிடன்


டிரம்ப், மெலனியா விரைவில் நலம்பெற பிரார்த்திக்கிறேன்-  ஜோபிடன்
x
தினத்தந்தி 3 Oct 2020 6:29 AM GMT (Updated: 3 Oct 2020 6:29 AM GMT)

"டிரம்ப், மெலனியா விரைவில் நலம்பெற பிரார்த்திக்கிறேன்" ஜனநாயக கட்சியின் அதிபர் வேட்பாளர் ஜோபிடன் தெரிவித்துள்ளார்.

வாஷிங்டன், 

அமெரிக்க அதிபர் டிரம்புக்கு தொற்று பாதிப்பு கண்டறியப்பட்டுள்ள நிலையில்  கொரோனாவின் தீவிரத்தை உணர வேண்டிய அவசியத்தை நினைவூட்டுவதாக, ஜனநாயக கட்சி அதிபர் வேட்பாளர் ஜோ பிடன் தெரிவித்துள்ளார். 

மிச்சிகன் பகுதியில் நடந்த தேர்தல் பிரச்சாரத்தில் பங்கேற்ற ஜோ பிடன், அதிபர் டிரம்ப் மற்றும் மெலனியா டிரம்ப் ஆகியோர் விரைவில் நலம் பெற இறைவனை பிரார்த்திப்பதாக கூறியுள்ளார். 

ஜோபிடன் மற்றும் அவரது மனைவி ஜில் பிடன் ஆகியோருக்கு இரண்டு முறை நடத்தப்பட்ட பரிசோதனையில் நோய் தொற்று இல்லை என உறுதி செய்யப்பட்ட பின்னர் இருவரும் பிரச்சாரத்தில் பங்கேற்றனர்.

Next Story