நான் இப்போது நன்றாக உணர்கிறேன்,விரைவில் திரும்பி வருவேன்- டொனால்டு டிரம்ப்


நான் இப்போது நன்றாக உணர்கிறேன்,விரைவில் திரும்பி வருவேன்- டொனால்டு டிரம்ப்
x
தினத்தந்தி 4 Oct 2020 3:27 AM GMT (Updated: 4 Oct 2020 4:22 AM GMT)

கொரோனா பாதிக்கப்பட்ட டிரம்புக்கு ரெம்டெசிவர் மருத்து மூலம் சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதாக மருத்துவமனை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

வாஷிங்டன்,

அமெரிக்க அதிபர்  டொனால்டு டிரம்ப் மற்றும் அவரது மனைவி மெலனியா டிரம்ப் ஆகிய இருவரும் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். கொரோனா தொற்று பாதித்த டிரம்ப்  ராணுவ மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார். 

மெலனியா டிரம்ப் வெள்ளை மாளிகையிலேயே தனிமைப்படுத்தப்பட்டுள்ளார்.  டிரம்பின் உடல் நிலையை தீவிரமாக கண்காணித்து வரும் மருத்துவர்கள், அடுத்த 48 மணி நேரம் மிக முக்கியமானது என்று கூறியுள்ளனர். டிரம்பின் உடல் நிலை குறித்த வதந்திகளும் சமூக வலைத்தளங்களில் கொடி கட்டி பறக்கின்றன. 

இந்நிலையில், கொரோனாவுக்கு சிகிச்சை பெற்று வரும் அமெரிக்க அதிபர் டிரம்ப், நான் இப்போது மிகவும் நன்றாக உணர்கிறேன் என தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள டுவிட்டர் செய்தியில், நான் இப்போது மிகவும் நன்றாக உணர்கிறேன். 

விரைவில் நான் மீண்டு வருவேன்.  துவங்கியதை போலவே பிரசாரத்தை நிறைவு செய்ய வேண்டும் என்பதில் ஆர்வமாக உள்ளேன். அமெரிக்காவை மிகச்சிறந்ததாக மாற்ற வேண்டியுள்ளது.   கொரோன வைரசை நாங்கள் நிச்சயம் வீழ்த்தப் போகிறோம்.  அடுத்த சில நாட்களில் என்ன நடக்கிறது என பார்ப்போம்.  உண்மையான சோதனை அதுதான் என யூகிக்கிறேன்” எனத்தெரிவித்துள்ளார். 

இதற்கிடையே, டிரம்புக்கு ரெம்டெசிவர் மருத்து மூலம் சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதாக மருத்துவமனை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 


Next Story