உலகைச் சுற்றி....


உலகைச் சுற்றி....
x
தினத்தந்தி 5 Oct 2020 11:02 PM GMT (Updated: 5 Oct 2020 11:02 PM GMT)

இங்கிலாந்தில் கொரோனா வைரஸ் பாதித்தவர்களின் எண்ணிக்கை 5 லட்சத்தை கடந்துள்ளது.

* இங்கிலாந்தில் கொரோனா வைரஸ் பாதித்தவர்களின் எண்ணிக்கை 5 லட்சத்தை கடந்துள்ளது. நேற்று ஒரே நாளில் அங்கு 22 ஆயிரத்து 961 பேருக்கு வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டதன் மூலம் மொத்த மதிப்பு 5 லட்சத்து 2 ஆயிரத்து 978 ஆக உயர்ந்துள்ளது.

* அமெரிக்காவின் நியூயார்க் நகரில் சிறிய ரக கடல் விமானம் ஒன்று தரையில் விழுந்து நொறுங்கியது. இந்த கோர விபத்தில் விமானத்தில் பயணம் செய்த 3 பேர் படுகாயம் அடைந்தனர். அவர்கள் ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.

* அர்ஜெண்டினாவில் நேற்று புதிதாக 7 ஆயிரத்து 668 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டதால் அங்கு கொரோனா பாதித்தவர்களின் மொத்த எண்ணிக்கை 8 லட்சத்தை கடந்துவிட்டது. அதேபோல் கொரோனா பலி எண்ணிக்கை 21 ஆயிரத்தை தாண்டியுள்ளது.

* பிலிப்பைன்ஸ் நாட்டின் மேற்கு பகுதியில் அமைந்துள்ள மைன்டோரோ தீவில் நேற்று சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. இது ரிக்டர் அளவுகோலில் 5.6 புள்ளிகளாக பதிவானது. இந்த நிலநடுக்கத்தால் ஏற்பட்ட சேத விவரங்கள் குறித்து தகவல்கள் இல்லை.

* சீனாவின் வடமேற்கு பகுதியில் உள்ள கன்சு மாகாணம் மின்ஷியான் நகரில் சாலையில் சென்று கொண்டிருந்த லாரி ஒன்று டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்து அருகிலுள்ள மார்க்கெட்டுக்குள் புகுந்ததில் 6 பேர் சம்பவ இடத்திலேயே உடல் நசுங்கி உயிரிழந்தனர். மேலும் 14 பேர் படுகாயம் அடைந்தனர்.

Next Story