உலக செய்திகள்

வெள்ளை மாளிகை வந்ததும் மாஸ்க் அணிவதை தவிர்த்த டிரம்ப் ! + "||" + Don't Be Afraid Of Covid": Trump Returns To White House, Removes Mask

வெள்ளை மாளிகை வந்ததும் மாஸ்க் அணிவதை தவிர்த்த டிரம்ப் !

வெள்ளை மாளிகை வந்ததும் மாஸ்க் அணிவதை தவிர்த்த டிரம்ப் !
கொரோனா தொற்றைக் கண்டு யாரும் அச்சப்பட வேண்டாம் என அமெரிக்க அதிபர் டிரம்ப் கூறினார்.
வாஷிங்டன்,

அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்புக்கு கொரோனா வைரஸ் தொற்று பாதிப்பு ஏற்பட்டது. தொற்று பாதிப்பு ஏற்பட்டவுடன் அந்நாட்டு ராணுவ மருத்துவமனையில் டிரம்ப் அனுமதிக்கப்பட்டார். கடந்த 4 தினங்களாக மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த டிரம்ப், திங்கள் கிழமை மருத்துவமனையில் இருந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்டு வெள்ளை மாளிகை திரும்பினார். 

வெள்ளை மாளிகையின் தெற்கு பகுதியில்  உள்ள ஸ்டேட்லே பால்கனிக்கு வந்த டிரம்ப்,   புகைப்படத்திற்கு தம்ஸ் அப் காட்டினார். அப்போது, மாஸ்க்கை கழற்றி தனது பாக்கெட்டில் டிரம்ப் வைத்துக்கொண்டார்.  மேலும், கொரோனா வைரசைக் கண்டு அமெரிக்கர்கள் அச்சப்பட வேண்டாம் எனவும் டிரம்ப் கூறினார். 

கொரோனா பரவலை கட்டுப்படுத்த மாஸ்க் அணிவது மிக அவசியம் என மருத்துவ வல்லுநர்கள் அறிவுறுத்தும் நிலையில்,  தொற்று பாதித்த டிரம்ப் மாஸ்க் அணியாமல் அலட்சியமாக இருந்தது  சமூக வலைத்தளங்களில் விமர்சிக்கப்படுகிறது. உலகம் முழுவதும் 10 லட்சத்திற்கு மேற்பட்ட உயிரையும் அமெரிக்காவில் மட்டும் 2 லட்சத்திற்கு மேற்பட்ட உயிர்களையும் காவு வாங்கியுள்ள கொரோனாவை டிரம்ப்  குறைத்து மதிப்பிடுவது விமர்சனங்களை சந்தித்து வருகிறது.


தொடர்புடைய செய்திகள்

1. அத்துமீறி கடல் எல்லைக்குள் நுழைந்த அமெரிக்க போர்க்கப்பலை விரட்டி அடித்த ரஷிய போர்க்கப்பல்
அத்துமீறி தங்களது கடல் எல்லைக்குள் நுழைந்த அமெரிக்க போர்க்கப்பலை ரஷிய போர்க்கப்பல் துரத்திச் சென்ற விரட்டித்ததாக அந்நாட்டு பாதுகாப்பு அமைச்சகம் தெரிவித்துள்ளது.
2. அமெரிக்க கடற்படை அதிகாரி தைவானுக்கு திடீர் பயணம்?
அமெரிக்க கடற்படை அதிகாரி, முன் அறிவிப்பு இன்றி தைவானுக்கு திடீர் பயணம் மேற்கொண்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
3. போயிங் 737 மேக்ஸ் விமானங்கள்: 20 மாதங்களாக நீடித்த தடை முடிவுக்கு வந்தது
எத்தியோப்பியாவில் ‘போயிங் 737 மேக்ஸ் 8’ ரக விமானம் கடந்த ஆண்டு மார்ச் 10ம் தேதி விபத்துக்குள்ளானதில் இந்தியர்கள் உள்பட 157 பேர் உயிரிழந்தனர். முன்னதாக இதே ரக விமானம் இந்தோனேசியாவில் 2018ம் ஆண்டு அக்டோபர் 29ம் தேதி விபத்துக்குள்ளானதில் 189 பேர் பலியாகினர்.
4. டிரம்ப் எங்களுடன் ஒத்துழைக்காவிட்டால் கொரோனாவால் உயிரிழப்போர் எண்ணிக்கை அதிகரிக்கும் ஜோ பைடன் எச்சரிக்கை
டொனால்டு டிரம்ப் எங்களுடன் ஒத்துழைக்காவிட்டால் கொரோனாவால் உயிரிழப்போர் எண்ணிக்கை அதிகரிக்கும் என புதிதாக தேர்ந்து எடுக்கப்பட்ட ஜோ பைடன் எச்சரிக்கை விடுத்து உள்ளார்.
5. அமெரிக்காவில் படிக்கும் இந்திய மாணவர்களின் எண்ணிக்கை கணிசமாக குறைந்து உள்ளது
அமெரிக்காவில் படிக்கும் இந்திய மாணவர்களின் எண்ணிக்கை 4.4 சத்வீதம் குறைந்து உள்ளது என அறிக்கை ஒன்று சுட்டிக்காட்டுகிறது.