உலக செய்திகள்

மாடர்னா கொரோனா தடுப்பூசிக்கு நவம்பர் 25க்குப் பிறகு அமெரிக்காவின் அவசரகால அங்கீகாரத்தை பெறும் + "||" + Moderna to seek emergency FDA approval for its COVID-19 vaccine after November 25: Report

மாடர்னா கொரோனா தடுப்பூசிக்கு நவம்பர் 25க்குப் பிறகு அமெரிக்காவின் அவசரகால அங்கீகாரத்தை பெறும்

மாடர்னா கொரோனா தடுப்பூசிக்கு நவம்பர் 25க்குப் பிறகு அமெரிக்காவின் அவசரகால அங்கீகாரத்தை பெறும்
மாடர்னா நவம்பர் 25 க்குப் பிறகு அதன் கொரோனா தடுப்பூசிக்கு அமெரிக்க உணவு மற்றும் மருந்து நிர்வாகத்திடம் அவசரகால பயன்பாட்டு அங்கீகாரத்தை பெறும் என கூறப்படுகிறது.
புதுடெல்லி: 

கொரோனா வைரஸ் தொற்றுநோய் உலகளவில் தொடர்ந்து அழிவைத் தொடர்ந்து வருவதால், பாதுகாப்பான மற்றும் பயனுள்ள தடுப்பூசி அவசியம்.

கொரோனா வைரசை  ஏற்படுத்தும் சார்ஸ் கோவ் 2 வைரசுக்கு எதிரான 30 க்கும் மேற்பட்ட பரிசோதனை தடுப்பூசிகள், ஏற்கனவே தாமதமான நிலையில்  மனித சோதனைகளில் பல தடுப்பூசிகள்  நுழைந்துள்ளன. 

கொரோனாவுக்கு பாதுகாப்பான மற்றும் பயனுள்ள தடுப்பூசியை தயாரிப்பதற்கான உலகளாவிய பந்தயத்தில் முன்னணியில் இருப்பவர்களில் மாடர்னா இன்க்  நிறுவனமும் ஒன்றாகும்.

ஃபோர்ப்ஸின் வெளியிட்டு உள்ள தகவல் படி அமெரிக்க உயிரி தொழில்நுட்ப நிறுவனம் அதன் கொரோனா வைரஸ் தடுப்பூசி  எம்.ஆர்.என்.ஏ -1273 க்கு அமெரிக்க உணவு மற்றும் மருந்து நிர்வாகத்திடம் (எஃப்.டி.ஏ) அவசரகால பயன்பாட்டு அங்கீகாரத்தை (ஈ.யு.ஏ) பெறலாம். 

நவம்பர் 25 க்குப் பிறகு போதுமான பாதுகாப்புத் தரவு இருந்தால்.  பொது சுகாதார அவசர காலங்களில் அங்கீகரிக்கப்படாத மருத்துவ தயாரிப்புகள் அல்லது சிகிச்சையைப் பயன்படுத்துவதற்கு உணவு மற்றும் மருந்து நிர்வாகம் அவசரகால பயன்பாட்டு அங்கீகாரம் அனுமதிக்கிறது.

"நவம்பர் 25, உணவு மற்றும் மருந்து நிர்வாகத்துக்கு நாங்கள் அனுப்பும் அவசரகால பயன்பாட்டு அங்கீகாரக் கோப்பில் வைக்க போதுமான பாதுகாப்புத் தரவு எங்களிடம் இருக்கும்" என்று மாடர்னா தலைமை நிர்வாக அதிகாரி ஸ்டீபன் பான்செல் மேற்கோளிட்டுள்ளார்.

மேலும் அவர் கூறும் போது எவ்வாறாயினும், 2021 ஆம் ஆண்டின் முதல் காலாண்டின் பிற்பகுதி அல்லது இரண்டாம் காலாண்டு வரை ஒப்புதல் எதிர்பார்க்கப்படாது என்று பான்செல் கூறினார். முதல் காலாண்டின் பிற்பகுதி அல்லது ஒப்புக் கொண்ட வழிகாட்டுதல்களில் ஆய்வில் பங்கேற்பவர்கள் குறைந்தது பாதி பேர் இறுதி ஊசி போட்டதைத் தொடர்ந்து இரண்டு மாத கண்காணிப்புக்கு உட்படுத்தப்பட வேண்டும்.

"எங்கள் தடுப்பூசியிலிருந்து எனக்கு தெரிந்தவற்றின் அடிப்படையில், தாமதமான [முதல் காலாண்டு], ஆரம்ப [இரண்டாம் காலாண்டு] ஒப்புதலது  என் ஒரு நியாயமான காலவரிசை என்று நான் நினைக்கிறேன்," என்று பான்செல் கூறினார்.

சோதனையின் ஆரம்ப கண்டுபிடிப்புகள், மாடர்னாவின் தடுப்பூசி நன்கு ப்யனளிக்க கூடியதாக உள்ளது.  மற்றும் வயதானவர்களுக்கு வலுவான நோயெதிர்ப்பு சக்தியை உருவாக்குகிறது என்பதைக் காட்டுகிறது. நியூ இங்கிலாந்து ஜர்னல் ஆஃப் மெடிசினில் வெளியிடப்பட்ட ஆய்வில், எம்.ஆர்.என்.ஏ -1273 தடுப்பூசி 55 வயதுக்கு மேற்பட்ட பழைய சோதனை பங்கேற்பாளர்களால் நன்கு ஏற்றுக் கொள்ளப்பட்டது என்பதைக் காட்டுகிறது. 

தடுப்பூசியுடன் தொடர்புடைய பாதகமான நிகழ்வுகள் முக்கியமாக லேசான அல்லது மிதமானவை என்றும் ஆய்வில் குறிப்பிடப்பட்டுள்ளது. மாடர்னா இதுவரை 30,000 பங்கேற்பாளர்களில் 15,000 பேருக்கு தனது தடுப்பூசியை வழங்கியுள்ளது மற்றும் அதன் மருத்துவ பரிசோதனையின் பாதியிலேயே உள்ளது.

தொடர்புடைய செய்திகள்

1. 3 மாநிலங்களில் இரண்டு புதியவகை கொரோனா: மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம்
இரண்டு புதிய வகை கொரோனா தெலுங்கானா, மராட்டியத்தில் கண்டறியப்பட்டு இருப்பதாக மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது
2. கொரோனா பாதிப்பு தொடர்ந்து அதிகரித்தால் ஊரடங்கு அமல்படுத்தப்படும் : உத்தவ் தாக்கரே
கொரோனா பாதிப்பு தொடர்ந்து அதிகரித்தால் ஊரடங்கு அமல்படுத்தப்படும் என்று உத்தவ் தாக்கரே தெரிவித்துள்ளார்.
3. தமிழகத்தில் இன்று 452- பேருக்கு கொரோனா பாதிப்பு
தமிழகத்தில் இன்று 452-பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
4. அமெரிக்காவின் டெக்சாசில் வாட்டி வதைக்கும் கடும் குளிர்; பேரிடர் மாகாணமாக அறிவிப்பு
அமெரிக்காவின் டெக்சாஸ் மாகாணத்தில் வரலாறு காணாத கடும் குளிர் வாட்டி வருகிறது.
5. கொரோனா தொற்றில் இருந்து தப்பிக்க முகக்கவசம் மட்டுமே தீர்வு: உத்தவ் தாக்கரே
மராட்டியத்தில் கடந்த சில நாட்களாக கொரோனா பாதிப்பு அதிகரித்து வருகிறது.