உலக செய்திகள்

அமெரிக்க விஞ்ஞானிகள் உருவாக்கிய பத்தே நிமிடத்தில் கொரோனா பாதிப்பைக் கண்டறியும் சென்சார் பரிசோதனைக் கருவி + "||" + US researchers develop low-cost sensor that rapidly detects COVID

அமெரிக்க விஞ்ஞானிகள் உருவாக்கிய பத்தே நிமிடத்தில் கொரோனா பாதிப்பைக் கண்டறியும் சென்சார் பரிசோதனைக் கருவி

அமெரிக்க விஞ்ஞானிகள் உருவாக்கிய பத்தே நிமிடத்தில் கொரோனா பாதிப்பைக் கண்டறியும் சென்சார் பரிசோதனைக் கருவி
பத்தே நிமிடத்தில் கொரோனா பாதிப்பைக் கண்டறியும் குறைந்த விலை சென்சார் பரிசோதனைக் கருவியை அறிவியல் ஆராய்ச்சியாளர்கள் உருவாக்கியுள்ளனர்.
வாஷிங்டன்

உலக அளவில் கொரோனா பரிசோதனைகள் சாதாரண மக்களால் மேற்கொள்ள முடியாத நிலையில் இருந்துவருகின்றன. அரசு சார்பில் இலவசமாகவும் குறைந்த கட்டணத்திலும் சோதனைகள் செய்யப்பட்டுவருகின்றன. சோதனை செய்து கொண்டாலும் ஒரு நாள் கழித்தே முடிவுகளும் கிடைக்கின்றன. தற்போது பத்தே நிமிடத்தில் கொரோனா பாதிப்பைக் கண்டறியும் குறைந்தன் விலை சென்சார் பரிசோதனைக் கருவியை அறிவியல் ஆராய்ச்சியாளர்கள் உருவாக்கியுள்ளனர்.

கலிபோர்னியா இன்ஸ்டிட்யூட் ஆப் டெக்னாலஜியைச் சேர்ந்த ஆராய்ச்சியாளர்கள் இந்த சென்சார் கருவியை வடிவமைத்துள்ளனர். இந்த பரிசோதனைக் கருவி கிராஃபேன் உதவியுடன் தயாரிக்கப்பட்டு மற்றோரு சென்சாருடன் இணைக்கப்பட்டது. அது ரத்தம், உமிழ்நீர், வியர்வையின் மூலம் நோய் பாதிப்பைக் கண்டறியும்.

ஒரு பிளாஸ்டிக் அட்டையில் அமைக்கப்பட்ட இந்த சென்சாரில் 3டி கிராஃபேன் அமைப்பு உள்ளது. பெரும்பாலான உலக நாடுகளில் கொரோனா குறைந்துவரும் நிலையில், பல இடங்களில் நோய் பாதிப்பும் அதிகரித்தும் வருகிறது. எனவே பரிசோதனைகளை எளிமையாக செய்யவேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளது.

இந்த நிலையில், அறிவியல் ஆராய்ச்சியாளர்கள் உருவாக்கியுள்ள சென்சார் கருவி கொரோனா பரிசோதனைகளுக்கு உதவும் எனக் கருதப்படுகிறது.


தொடர்புடைய செய்திகள்

1. அமெரிக்காவில் 8.7 கோடி கொரோனா தடுப்பூசிகள் பொதுமக்களுக்கு செலுத்தப்பட்டுள்ளதாக தகவல்
அமெரிக்காவில் இதுவரை 8.7 கோடி டோஸ் கொரோனா தடுப்பூசிகள் பொதுமக்களுக்கு செலுத்தப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
2. கொரோனா வைரஸ் முன்பை விட வேகமாக உருமாறி வருவதாக ஆய்வில் தகவல்
பெங்களூரு ஆய்வு செய்யபட்ட கொரோனா மாதிரிகள் தலா 11 பிறழ்வுகளைக் காட்டுகின்றன; வைரஸ் முன்பை விட வேகமாக ஒருமாறி வருவதாக ஆய்வில் தெரியவந்து உள்ளது.
3. தமிழகம் உள்பட 6 மாநிலங்களில் மீண்டும் வேகம் எடுக்கும் கொரோனா பாதிப்பு: புதிய வழிகாட்டு விதிமுறைகள்
தமிழகம் உள்பட 6 மாநிலங்களில் மீண்டும் வேகம் எடுக்கும் கொரோனா பாதிப்பை தொடர்ந்து மத்திய அரசௌ புதிய வழிகாட்டு விதிமுறைகளை அறிவித்து உள்ளது.
4. அமெரிக்காவில் தமிழ் பெண் எம்.பி.க்கு முக்கிய பதவி
அமெரிக்காவில் தமிழ் பெண் எம்.பி.க்கு வணிக மற்றும் நிர்வாக சட்டம் தொடர்பான துணைக்குழுவின் துணைத்தலைவராக நியமிக்கப்பட்டுள்ளார்.
5. அமெரிக்காவில் மே மாதத்துக்குள் அனைத்து அமெரிக்கர்களுக்கும் கொரோனா தடுப்பூசி ஜோ பைடன் சூளுரை
அமெரிக்காவில் வருகிற மே மாதத்துக்குள் கொரோனா தடுப்பூசி போட்டுக் கொள்ளும் தகுதியுடைய அனைத்து அமெரிக்கர்களுக்கும் தடுப்பூசி கிடைக்க வழிவகை செய்யப்படும் என ஜனாதிபதி ஜோ பைடன் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.