பிரதமர் இம்ரான் கானுக்கு எதிராக அக்டோபர் 16 ம் தேதி முதல் மெகா பேரணியை நடத்த பாகிஸ்தான் எதிர்க்கட்சிகள் திட்டம்


பிரதமர் இம்ரான் கானுக்கு எதிராக அக்டோபர் 16 ம் தேதி முதல் மெகா பேரணியை நடத்த பாகிஸ்தான் எதிர்க்கட்சிகள் திட்டம்
x
தினத்தந்தி 6 Oct 2020 9:52 AM GMT (Updated: 6 Oct 2020 9:52 AM GMT)

பிரதமர் இம்ரான் கானுக்கு எதிராக அக்டோபர் 16 ம் தேதி முதல் மெகா பேரணியை நடத்த பாகிஸ்தான் எதிர்க்கட்சிகள் திட்டமிட்டுள்ளன.

இஸ்லாமாபாத்: 

பாகிஸ்தான் நாட்டின் 11 எதிர்க்கட்சிகளை உள்ளடக்கிய கூட்டணியான பாகிஸ்தான் ஜனநாயக இயக்கம் (பி.டி.எம்) பிரதமர் இம்ரான் கான் தலைமையிலான பி.டி.ஐ அரசாங்கத்திற்கு எதிராக முதல் பிரச்சார கூட்டத்தை குவெரான்வாலாவில்  அக்டோபர் 16 ம் தேதி  தொடங்க உள்ளது.

செப்டம்பர் 20 ம் தேதி இஸ்லாமாபாத்தில் நடைபெற்ற பலதரப்பட்ட ஆலோசனை கூட்டங்களில்எடுக்கப்பட்ட முடிவுகளுக்கு ஏற்ப பாகிஸ்தான் ஜனநாயக இயக்க வழிநடத்தல் குழு நான்கு மாகாணங்களில் ஆறு பொதுக் கூட்டங்களின் அட்டவணையை  வெளியிட்டு உள்ளது.

வழிநடத்தல் குழு எடுத்த முடிவுகளை பாகிஸ்தான் முஸ்லீம் லீக்-நவாஸ் (பி.எம்.எல்-என்) இன் கன்வீனர் அஹ்சன் இக்பால் மற்ற கட்சிகளின் தலைவர்களுடன் பத்திரிகையாளர்கள் சந்திப்பில் அறிவித்தார்.

பாகிஸ்தான் ஜனநாயக இயக்கத்தின் இரண்டாவது பொதுக் கூட்டம் அக்டோபர் 18 ஆம் தேதி கராச்சியிலும், மூன்றாவது அக்டோபர் 25 ஆம் தேதி குவெட்டாவிலும், நான்காவது பெஷாவரில் நவம்பர் 22 ஆம் தேதியும், நவம்பர் 30 ஆம் தேதி முல்தானில் ஐந்தாவது கூட்டமும் மற்றும் டிசம்பர் 13 ஆம் தேதி லாகூரில் கடைசியாக நடைபெறும் என்று இக்பால் தெரிவித்துள்ளார்.

இந்த இயக்கம் அதன் முதல் கட்டத் தலைவராக ஜாமியத் உலமா-இ-இஸ்லாம்-ஃபஸ்ல் (ஜே.யு.ஐ-எஃப்) தலைவர் மவுலானா ஃபஸ்லூர் ரெஹ்மானை நியமித்திருந்தாலும், வழிநடத்தல் குழு உறுப்பினர்கள் பாகிஸ்தான் மக்கள் கட்சியின் (பிபிபி) ராஜா பர்வேஸ் அஷ்ரப்பை ஏகமனதாக தேர்ந்தெடுத்ததாக இக்பால் தெரிவித்தார். மூத்த துணைத் தலைவராக, பி.எம்.எல்-என்'ஸ் ஷாஹித் ககான் அப்பாஸி அதன் பொதுச் செயலாளராக நியமிக்கப்பட்டார்.

Next Story