2020ஆம் ஆண்டு இயற்பியல் துறைக்கான நோபல் பரிசு அறிவிப்பு


2020ஆம் ஆண்டு இயற்பியல் துறைக்கான நோபல் பரிசு அறிவிப்பு
x
தினத்தந்தி 6 Oct 2020 10:25 AM GMT (Updated: 6 Oct 2020 10:25 AM GMT)

2020ஆம் ஆண்டு இயற்பியல் துறைக்கான நோபல் பரிசு அறிவிக்கப்பட்டுள்ளது.

வாஷிங்டன், 

உலகின் மிக உயரிய விருதுகளுள் ஒன்றாக கருதப்படும் நோபல் பரிசு நேற்று முதல் அறிவிக்கப்பட்டு வருகிறது. இந்த ஆண்டு நோபல் பரிசுக்காக 211 தனிநபர்கள் மற்றும் 107 அமைப்புகள் என மொத்தம் 318 பேர் நோபல் பரிசுக்கான போட்டி பட்டியலில் உள்ளனர்.

இந்நிலையில் 2020ஆம் ஆண்டு இயற்பியல் துறைக்கான நோபல் பரிசு பெறுபவர்களின் பெயர்கள் தற்போது அறிவிக்கப்பட்டுள்ளது. இதன்படி ரோஜர் பென்ரோஸ், ரெயின் ஹார்ட் ஜென்சில், ஆண்டிரியா கெஸ் ஆகிய 3 பேருக்கு இயற்பியலுக்கான நோபல் பரிசு அறிவிக்கப்பட்டுள்ளது. கருந்துளை பற்றிய ஆய்வுக்காக 3 பேருக்கும் இந்த கவுரவம் அளிக்கப்பட்டுள்ளது. 

இதனைத்தொடர்ந்து நாளை (7ம் தேதி) வேதியியல் துறைக்கும், 8ம் தேதி இலக்கியத்திற்கும், 9ம் தேதி அமைதிக்கான நோபல் பரிசும், 10ம் தேதி பொருளாதாரத்திற்கான நோபல் பரிசும் அறிவிக்கப்பட உள்ளது.

Next Story