இங்கிலாந்து பிரதமரின் ஊரடங்கு திட்டத்திற்கு கடும் எதிர்ப்பு: பிளவுபட்ட நாடாளுமன்றம்


இங்கிலாந்து பிரதமரின் ஊரடங்கு திட்டத்திற்கு கடும் எதிர்ப்பு: பிளவுபட்ட நாடாளுமன்றம்
x
தினத்தந்தி 7 Oct 2020 3:38 PM GMT (Updated: 7 Oct 2020 3:38 PM GMT)

இங்கிலாந்து பிரதமரின் ஊரடங்கு திட்டத்திற்கு கடும் எதிர்ப்பு .நாடாளுமன்றத்தில் எம்.பிக்களிடையே பிளவு ஏற்பட்டு உள்ளது.

லண்டன்

இங்கிலாந்து பிரதமர் போரிஸ் ஜான்சனின் புதிய ஊரடங்கு திட்டத்துக்கு கடும் எதிர்ப்பு உருவாகியுள்ளதையடுத்து நாடாளுமன்ற உறுப்பினர்களிடையே கருத்து வேறுபாடுகள் ஏற்பட்டுள்ளன.

போரிஸ் ஜான்சனின் திட்டங்களுக்கு முக்கிய கேபினட் உறுப்பினர்கள் பலத்த எதிர்ப்பு தெரிவித்துள்ளார்கள்.சிலர் பொருளாதாரத்தை காப்பாற்றவேண்டும் என்றும், சிலர் கடுமையான கட்டுப்பாடுகள் வேண்டும் என்றும் கோருவதையடுத்து மூத்த நாடாளுமன்ற உறுப்பினர்களிடையே பிளவு ஏற்பட்டுள்ளது.

இதற்கிடையில், கொரோனா அதிகம் பாதித்துள்ள வடக்கு நகரங்களான மான்செஸ்டர், லிவர்பூல், லீட்ஸ் மற்றும் நியூகேஸில் தலைவர்கள் கொரோனா கட்டுப்பாடுகளை அதிகரிக்கவேண்டாம் என கோரி போரிஸ் ஜான்சனுக்கு கடிதம் எழுதியுள்ளார்கள்.

விருந்தோம்பல் துறையில் அரசின் 10 மணி ஊரடங்கு திட்டம் குறித்து ஆளுங்கட்சி நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கிடையிலேயே கருத்துவேறுபாடு ஏற்பட்டுள்ள நிலையில், இந்த தகவல்கள் வெளியாகியுள்ளன.

ஊரடங்கை அமுல்படுத்துவது தொடர்பாக நேற்று வாக்களிப்பு ஒன்று நடத்த திட்டமிடப்பட்டிருந்த நிலையில், கன்சர்வேட்டிவ் கட்சி நாடாளுமன்ற உறுப்பினர்கள், லேபர் கட்சி நாடாளுமன்ற உறுப்பினர்களுடன் இணைந்து போரிஸ் ஜான்சனின் திட்டங்களை தோற்கடிக்க திட்டமிட்டதையடுத்து, அந்த வாக்களிப்பு அடுத்த திங்கட்கிழமைக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.மொத்தத்தில், பிரதமரின் கொரோனா திட்டங்கள் தொடர்பாக நாடாளுமன்றத்தில் கடும் குழப்பம் நிலவுகிறது எனலாம்.


Next Story