புரட்சித்தளபதி காசிம் சுலைமானி கொல்லப்பட்டதற்கு அமெரிக்கா பதில் சொல்லியே ஆக வேண்டும் - ஈரான் அரசு + "||" + Iran: US gov’t, not just Trump, blamed for Soleimani killing
புரட்சித்தளபதி காசிம் சுலைமானி கொல்லப்பட்டதற்கு அமெரிக்கா பதில் சொல்லியே ஆக வேண்டும் - ஈரான் அரசு
ஈரானின் புரட்சித்தளபதி காசிம் சுலைமானி கொல்லப்பட்டதற்கு அமெரிக்கா பதில் சொல்லியே ஆக வேண்டும் என்று ஈரான் அரசு தெரிவித்துள்ளது.
தெக்ரான்
ஈரான் மற்றும் அமெரிக்காவிடையே கடந்த 2018-ஆம் ஆண்டு முதல் போர்ச் சூழல் மூண்டு வந்த நிலையில், கடந்த
ஜனவரி மாதம் ஈரானின் முக்கிய போர்த் தளபதியான காசிம் சுலைமானியை அமெரிக்கா ஏவுகணைத் தாக்குதல்
நடத்திக் கொன்றது.
இதன் காரணமாக ஈரான் இராணுவம், ஈராக்கில் இயங்கிவரும் அமெரிக்க இராணுவத் தளத்தில் தாக்குதல் நடத்தியது. அந்தத் தாக்குதலில் நூற்றுக்கும் மேற்பட்ட அமெரிக்க வீரர்கள் பலத்த காயம் அடைந்தனர்.இதையடுத்து, இரு நாடுகளுக்கும் அடிக்கடி மோதல் போக்கு நிலவி வருவதால், அமெரிக்கா, ஈரான் மீது தொடர்ந்து பொருளாதாரத் தடை விதித்து வருகிறது.இதனால் ஈரான் கடுமையான பொருளாதார சரிவை சந்தித்துள்ளது.
இந்நிலையில் ஈரான் அரசு, புரட்சிப் படைத்தளபதி காசிம் சுலைமானி கொல்லப்பட்டதற்கு டிரம்ப் மட்டுமே காரணமல்ல, ஒட்டுமொத்த அமெரிக்காவும் காரணம்.இந்த கோழைத்தனமான தாக்குதலுக்குக் காரணமான
அமெரிக்கா பதில் சொல்லியே ஆக வேண்டும் என்று தெரிவித்துள்ளது.