உலக செய்திகள்

ஜெய்சங்கர் பேச்சுவார்த்தை: இந்தியா-ஜப்பான் இடையே இணைய பாதுகாப்பு ஒப்பந்தம் + "||" + Jaisankar talks: India-Japan cyber security pact

ஜெய்சங்கர் பேச்சுவார்த்தை: இந்தியா-ஜப்பான் இடையே இணைய பாதுகாப்பு ஒப்பந்தம்

ஜெய்சங்கர் பேச்சுவார்த்தை: இந்தியா-ஜப்பான் இடையே இணைய பாதுகாப்பு ஒப்பந்தம்
இந்தியா-ஜப்பான் இடையே நடந்த பேச்சுவார்த்தையில், இணைய பாதுகாப்பு ஒப்பந்த வரைவு அறிக்கை இறுதி செய்யப்பட்டது.
டோக்கியோ,

மத்திய வெளியுறவுத்துறை மந்திரி ஜெய்சங்கர், ஜப்பான் தலைநகர் டோக்கியோவுக்கு சென்றுள்ளார். அந்நாட்டு வெளியுறவுத்துறை மந்திரியுடன் பேச்சுவார்த்தை நடத்தினார். பரஸ்பர நலன்சார்ந்த பிராந்திய மற்றும் சர்வதேச பிரச்சினைகள் குறித்து கருத்து பரிமாற்றம் செய்தனர். இரு நாடுகளுக்கிடையிலான வலிமையான ஒத்துழைப்பு, கொரோனா உருவாக்கிய சவால்களை முறியடிப்பதில் முக்கிய பங்கு வகிக்கும் என்று தெரிவித்தனர்.


இந்த பேச்சுவார்த்தையில், இணைய பாதுகாப்பு ஒப்பந்த வரைவு அறிக்கை இறுதி செய்யப்பட்டது. இது, தகவல் கட்டமைப்பு, 5ஜி சேவை, செயற்கை நுண்ணறிவு ஆகிய துறைகளில் ஒத்துழைப்பை அதிகரிக்கும் ஒப்பந்தம் ஆகும்.

தொடர்புடைய செய்திகள்

1. மியான்மரின் நிலவரத்தை உன்னிப்பாக கவனித்து வருவதாக ஐ.நா.வில் இந்தியா கருத்து
மியான்மரில் நிலவும் சூழலை உன்னிப்பாக கவனித்து வருகிறோம் என ஐக்கிய நாடுகள் அவையில் இந்தியாவுக்கான நிரந்தர தூதர் டி.எஸ். திருமூர்த்தி தெரிவித்தார்.
2. அமெரிக்கா, ஜப்பானை தொடர்ந்து எகிப்து நாட்டில் போயிங் 777 ரக விமான சேவை தற்காலிகமாக நிறுத்தம்
அமெரிக்கா, ஜப்பானை தொடர்ந்து எகிப்து நாட்டில், போயிங் 777 ரக விமான சேவை தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.
3. இங்கிலாந்துக்கு எதிரான 2-வது டெஸ்ட்: ரோகித் சர்மா சதம் அடித்து அசத்தல்
சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நடைபெற்று வரும் 2-வது டெஸ்ட் போட்டியில் ரோகித் சர்மா சதம் அடித்து அசத்தினார்.
4. ஹர்பஜன் சிங்கை போல பந்து வீசிய ரோகித் சர்மா.!
இந்தியா- இங்கிலாந்து அணிகளுக்கு இடையேயான முதல் டெஸ்ட் போட்டி சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நடைபெற்று வருகிறது.
5. பிரான்சில் இருந்து இந்தியா வந்து சேர்ந்த 3 ரபேல் விமானங்கள்
பிரான்சில் இருந்து மேலும் 3 ரபேல் விமானங்கள் இன்று இந்தியா வந்து சேர்ந்தன.