உலக செய்திகள்

கொரோனாவை பரப்பியதற்காக சீன மிக பெரிய விலை கொடுக்க வேண்டியிருக்கும் டொனால்டு டிரம்ப் மிரட்டல் + "||" + A MESSAGE FROM THE US PRESIDENT

கொரோனாவை பரப்பியதற்காக சீன மிக பெரிய விலை கொடுக்க வேண்டியிருக்கும் டொனால்டு டிரம்ப் மிரட்டல்

கொரோனாவை பரப்பியதற்காக சீன மிக பெரிய விலை கொடுக்க வேண்டியிருக்கும் டொனால்டு டிரம்ப் மிரட்டல்
கொரோனாவை பரப்பியதற்காக சீன மிக பெரிய விலை கொடுக்க வேண்டியிருக்கும் என டொனால்டு டிரம்ப் மிரட்டல் விடுத்து உள்ளார்.
வாஷிங்டன்

கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு மருத்துவமனையிலிருந்து திரும்பிய அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப், சீனா கொரோனா வைரஸை பரப்பியதற்கு மிக பெரிய விலை' கொடுக்கு வேண்டியிருக்கும் தெரிவித்துள்ளார்.

டிரம்ப்பின் உதவியாளர் சமீபத்தில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டதைத் தொடர்ந்து டிரம்ப்பும் அவரது மனைவி மெலனியாவும் கொரோனா பரிசோதனையை மேற்கொண்டிருந்தனர். பரிசோதனையில் இருவருக்கும் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்ட நிலையில், ராணுவ மருத்துவமனையில் சிகிச்சைக்காக டிரம்ப் மட்டும் அனுமதிக்கப்பட்டார்.

மருத்துவமனையிலிருந்து நான்கு நாட்களுக்கு பின்னர் வெள்ளை மாளிகை திரும்பிய டிரம்ப் டிவிட்டரில் வீடியோ ஒன்றினை பதிவிட்டிருந்தார். அதில் கொரோனா தொற்றை உலகம் முழுவதும் பரப்பியதற்காக சீனாவை கடுமையாக விமர்சித்துள்ளார்.

“இது நடந்தது உங்கள் தவறு அல்ல, இது சீனாவின் தவறு. மேலும் இந்த நாட்டிற்கும் உலகத்திற்கும் அவர்கள் செய்ததற்கா அந்நாடு மிக பெரிய விலை' கொடுக்கு வேண்டியிருக்கும். இந்த தொற்று பாதிப்பு சீனாவின் தவறு என்பதை கவனத்தில் கொள்ளுங்கள்.” என டிரம்ப் டிவிட்டரில் தான் வெளியிட்ட காணொளி ஒன்றில் குறிப்பிட்டுள்ளார்.

ஆனால், அமெரிக்காவில் தொற்றினை கட்டுப்படுத்த மேற்கொள்ளப்பட்டுள்ள நடவடிக்கைகள் குறித்து எவ்வித தகவல்களையும் இந்த காணொளியில் அவர் குறிப்பிடவில்லை. தவிர்த்து சீனா மீது தொடர் குற்றச்சாட்டுகளையும், அந்நாட்டிலிருந்து வருபவர்களுக்கான விசா கட்டுப்பாட்டினையும் மேற்கொண்டுள்ளது.

மேலும் சீனாவுக்கு எதிராக ஆசிய நாடுகளையும் ஒருங்கிணைக்கும் செயலின் ஒரு பகுதியாக அமெரிக்க வெளியுறவுத்துறை செயலாளர் மைக் பாம்பியோ இந்தியா, ஜப்பான், ஆஸ்திரேலியா போன்ற நாடுகளின் வெளியுறவுத்துறை அமைச்சர்களை நேற்று சந்தித்திருந்தார்.


தொடர்புடைய செய்திகள்

1. தனியார் மருத்துவமனையில் கொரோனா தடுப்பூசி போட்டுக் கொண்ட கமல்ஹாசன்
சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் கொரோனா தடுப்பூசி போட்டுக் கொண்டார் நடிகர் கமல்ஹாசன்.
2. அணு ஆயுத சோதனையில் சீனா தீவிரம்: அமெரிக்க ஆய்வாளர் தகவல்
அணு ஆயுத சோதனையில் சீனா தீவிரம் காட்டி வருவதாக அமெரிக்க ஆய்வாளர் தெரிவித்துள்ளார்.
3. 2024-அதிபர் தேர்தலில் மீண்டும் நான் போட்டியிடலாம்: அமெரிக்க முன்னாள் அதிபர் டிரம்ப்
அமெரிக்காவில் 2024- ஆம் ஆண்டு நடைபெற உள்ள அதிபர் தேர்தலில் தான் மீண்டும் போட்டியிடலாம் என முன்னாள் அதிபர் டிரம்ப் கூறியுள்ளார்.
4. அமெரிக்காவில் குடியிருப்பு பகுதியில் விழுந்து நொருங்கிய குட்டி விமானம் 3 பேர் பலி
அமெரிக்காவின் ஜார்ஜியா மாகாணம் கெயின்ஸ்வில்லே நகரிலுள்ள விமான நிலையத்தில் இருந்து ஒற்றை என்ஜின் கொண்ட குட்டி விமானம் ஒன்று புறப்பட்டது.‌
5. அமெரிக்கா - அலாஸ்காவில் நிலநடுக்கம்
அமெரிக்காவின் அலஸ்கா மாகாணத்தில் நிலநடுக்கம் உணரப்பட்டது.