உலக செய்திகள்

உலகைச் சுற்றி.... + "||" + Around the world

உலகைச் சுற்றி....

உலகைச் சுற்றி....
ஆப்கானிஸ்தானில் வரும் கிறிஸ்துமஸ் பண்டிகைக்குள் அமெரிக்க படைகள் முற்றிலுமாக திரும்பப்பெறப்படும் என்று அமெரிக்க ஜனாதிபதி டிரம்ப் நேற்று முன்தினம் அறிவித்தார்.

* ஆப்கானிஸ்தானில் வரும் கிறிஸ்துமஸ் பண்டிகைக்குள் அமெரிக்க படைகள் முற்றிலுமாக திரும்பப்பெறப்படும் என்று அமெரிக்க ஜனாதிபதி டிரம்ப் நேற்று முன்தினம் அறிவித்தார்.

* மத அடிப்படையிலான போராளிகளால் கடந்த ஆண்டு ஏப்ரல் மாதம் கென்யாவில் கடத்தப்பட்ட 2 கியூபா டாக்டர்கள் விடுவிக்கப்பட்டதாக வெளியான தகவல்களை சோமாலியா மற்றும் கியூபா அதிகாரிகள் மறுத்துள்ளனர்.


* பெலாரஸ் நாட்டின் எதிர்க்கட்சி தலைவர் ஸ்வெட்லானா டிகானோவ்ஸ்கயாவை கிரிமினல் குற்றச்சாட்டின்பேரில் தேடப்படும் நபராக ரஷியா அறிவித்துள்ளது.

* இத்தாலியில் கொரோனா தொற்றை கட்டுப்படுத்தும் நடவடிக்கையாக, வீட்டை விட்டு வெளியேறினாலே முக கவசம் அணிவதை கட்டாயம் ஆக்கி உள்ளனர்.

* கொரிய போரின் முடிவை முறையாக அறிவிக்க தென் கொரிய அதிபர் மூன்ஜேஇன் அழைப்பு விடுத்தார். இதற்கு அமெரிக்கா உதவ வேண்டும் என்று அவர் கேட்டுக்கொண்டார். போரின் இறுதி அறிவிப்பு உண்மையில் கொரிய தீபகற்பத்தில் அமைதிக்கு வழிவகுக்கும் எனவும் அவர் குறிப்பிட்டார்.

* சிங்கப்பூரில் ‘வாட்ஸ் அப் குழு’வுடன் குழந்தைகள் ஆபாச படங்களை பகிர்ந்த குற்றச்சாட்டில், 36 வயதான ஜாகிதுல் என்பவருக்கு 6 மாதங் கள் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

1. உலகைச் சுற்றி....
பிரான்ஸ் நடத்திய விமான வான்வழி தாக்குதலில் திருமண விழா ஒன்றில் பங்கேற்ற விருந்தினர்கள் கொல்லப்பட்டதாக வெளியான தகவல்களை மாலி அரசு மறுத்துள்ளது.
2. உலகைச் சுற்றி....
மைக்ரோசாப்டு’ குறிப்பிட்ட சில பணியாளர்கள் விரும்பினால் அவர்கள் நிரந்தரமாகவே வீட்டிலிருந்து பணியாற்றலாம் என தற்போது அறிவித்துள்ளது.
3. உலகைச் சுற்றி....
ஆப்கானிஸ்தானின் வடக்கு பகுதியில் உள்ள குண்டூஸ் மாகாணத்தில் போலீசாரின் சோதனைச்சாவடியை குறிவைத்து பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் போலீசார் 7 பேர் கொல்லப்பட்டனர்.
4. உலகைச் சுற்றி....
பிரேசிலில் நேற்று ஒரே நாளில் 729 பேர் கொரோனாவுக்கு பலியானதால், அங்கு கொரோனாவால் உயிரிழந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 1 லட்சத்து 49 ஆயிரத்தை நெருங்கியுள்ளது.