உலக செய்திகள்

ஜோர்டான் நாட்டுக்கு புதிய பிரதமர் மன்னர் அப்துல்லா நியமனம் செய்தார் + "||" + King Abdullah has appointed a new Prime Minister of Jordan

ஜோர்டான் நாட்டுக்கு புதிய பிரதமர் மன்னர் அப்துல்லா நியமனம் செய்தார்

ஜோர்டான் நாட்டுக்கு புதிய பிரதமர் மன்னர் அப்துல்லா நியமனம் செய்தார்
அரபு நாடான ஜோர்டானில் பிரதமராக உமர் ரசாஸ் பதவி வகித்து வந்தார். அவர் திடீரென தனது பதவியை ராஜினாமா செய்தார். அதை மன்னர் அப்துல்லா ஏற்றுக்கொண்டார்.
அம்மான்,

அரபு நாடான ஜோர்டானில் பிரதமராக உமர் ரசாஸ் பதவி வகித்து வந்தார். அவர் திடீரென தனது பதவியை ராஜினாமா செய்தார். அதை மன்னர் அப்துல்லா ஏற்றுக்கொண்டார்.

இதையடுத்து அவர் அந்த நாட்டின் புதிய பிரதமராக தனது ஆலோசகராக இருந்து வந்த பிஷ் கசாவ்னேயை நேற்று முன்தினம் நியமனம் செய்துள்ளார். இது தொடர்பாக பிஷ் கசாவ்னேவுக்கு மன்னர் அப்துல்லா ஒரு கடிதம் எழுதி உள்ளார். அதில் அவர் புதிய பிரதமர் தனது மந்திரிசபையை அமைக்குமாறு உத்தரவிட்டுள்ளார்.

நாடு கொரோனா வைரஸ் தொற்றுக்கு எதிராக போராடி வருகிற வேளையில், மக்கள் நலன்களுக்கு முன்னுரிமை அளித்து, கொரோனா பெருந்தொற்றை கட்டுப்படுத்த தேவையான நடவடிக்கைகளை புதிய அரசு எடுக்க வேண்டும் என்று மன்னர் அப்துல்லா கேட்டுக்கொண்டுள்ளார்.