கொரோனாவின் தோற்றம் குறித்த விசாரணை: சீனாவின் ஒப்புதலுக்கு காத்திருக்கும் உலக சுகாதார அமைப்பு + "||" + The World Health Organization is waiting for China's approval
கொரோனாவின் தோற்றம் குறித்த விசாரணை: சீனாவின் ஒப்புதலுக்கு காத்திருக்கும் உலக சுகாதார அமைப்பு
கொரோனாவின் பிறப்பிடம் சீனாவாக இருக்கும் நிலையில், அந்த வைரசின் தோற்றம் குறித்து அங்கு சென்று விசாரணை நடத்த உலக சுகாதார அமைப்பு முடிவு செய்துள்ளது.
பீஜிங்,
உலகையே அச்சுறுத்தி வரும் கொரோனாவின் பிறப்பிடம் சீனாவாக இருக்கும் நிலையில், அந்த வைரசின் தோற்றம் குறித்து அங்கு சென்று விசாரணை நடத்த உலக சுகாதார அமைப்பு முடிவு செய்துள்ளது. இது தொடர்பாக கடந்த மே மாதம் நடந்த கூட்டத்தில் ஒரு மனதாக தீர்மானமும் நிறைவேற்றப்பட்டது.
இந்த விசாரணைக்காக சர்வதேச நாடுகளை சேர்ந்த நிபுணர் குழு ஒன்றை உலக சுகாதார அமைப்பு அமைத்து உள்ளது. இந்த குழுவில் இடம்பெற்றுள்ள நிபுணர்களின் பெயர் பட்டியலை சீனாவிடம் உலக சுகாதார அமைப்பு அளித்துள்ளது. எனினும் இதற்கு இன்னும் சீனா ஒப்புதல் அளிக்கவில்லை எனவும், அதற்காக காத்திருப்பதாகவும் அந்த அமைப்பின் சுகாதார அவசரகால திட்ட நிர்வாக இயக்குனர் மைக் ரியான் கூறியுள்ளார்.