அமெரிக்க அதிபர் டிரம்ப் நாளை முதல் பொது நிகழ்ச்சிகளில் கலந்து கொள்ளலாம்; வெள்ளை மாளிகை மருத்துவர் தகவல்


அமெரிக்க அதிபர் டிரம்ப் நாளை முதல் பொது நிகழ்ச்சிகளில் கலந்து கொள்ளலாம்; வெள்ளை மாளிகை மருத்துவர் தகவல்
x
தினத்தந்தி 9 Oct 2020 2:46 AM GMT (Updated: 9 Oct 2020 2:46 AM GMT)

அமெரிக்க அதிபர் டிரம்ப் நாளை முதல் பொது நிகழ்ச்சிகளில் கலந்து கொள்ளலாம் என வெள்ளை மாளிகை மருத்துவர் தெரிவித்து உள்ளார்.

வாஷிங்டன்,

அமெரிக்க அதிபர் தேர்தல் வருகிற நவம்பர் 3ந்தேதி நடைபெற உள்ளது.  அதற்கான பிரசார பணிகளில் அதிபர் டிரம்ப் மற்றும் எதிர்க்கட்சியான ஜனநாயக கட்சியின் ஜோ பிடன் ஆகியோர் தீவிரமுடன் உள்ளனர்.

இந்த நிலையில், அதிபர் டிரம்புக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டது.  இதேபோன்று வெள்ளை மாளிகையில் 12க்கும் மேற்பட்டோருக்கு கொரோனா இருப்பது உறுதி செய்யப்பட்டது.

இதனை தொடர்ந்து அதிபர் டிரம்ப் சிகிச்சை எடுத்து கொண்டார்.  அவர் மருத்துவமனையில் 3 நாட்கள் தங்கியிருந்து உள்ளார்.  இதன்பின்னர் அவர் குணமடைந்து கடந்த திங்கட்கிழமை வெள்ளை மாளிகை திரும்பினார்.

அதிபர் தேர்தலுக்கு மிக குறைவான நாட்களே உள்ள சூழலில், தேர்தல் பிரசார பணிகளில் ஈடுபட டிரம்ப் தயாராகி வருகிறார்.  இதுபற்றி டிரம்பின் வெள்ளை மாளிகை டாக்டர் சீன் கான்லே வெளியிட்டுள்ள அறிக்கையில், கொரோனா சிகிச்சையில் அமெரிக்க அதிபருக்கு நல்ல முறையில் முன்னேற்றம் ஏற்பட்டு உள்ளது.  இதனால் நாளை முதல் அவர் பொது நிகழ்ச்சிகளில் கலந்து கொள்வார் என நான் எதிர்பார்க்கிறேன் என தெரிவித்து உள்ளார்.

Next Story