தலீபான்கள் தாக்குதலில் ஆப்கான் பாதுகாப்பு படையினர் 11 பேர் உயிரிழப்பு


தலீபான்கள் தாக்குதலில் ஆப்கான் பாதுகாப்பு படையினர் 11 பேர் உயிரிழப்பு
x
தினத்தந்தி 9 Oct 2020 6:32 PM IST (Updated: 9 Oct 2020 6:32 PM IST)
t-max-icont-min-icon

தலீபான்கள் தாக்குதலில் ஆப்கான் பாதுகாப்பு படையினர் 11 பேர் உயிரிழந்துள்ளனர்.

காபூல்,

ஆப்கானிஸ்தானில் நீண்ட காலமாக அரசு படையினருக்கு தலீபான் அமைப்பினருக்கும் இடையே மோதல் நீடித்து வருகிறது. இந்த நிலையில், ஆப்கானிஸ்தானின்  குண்டூஸ் மற்றும் ஹேல்மேண்ட் மாகாணங்களில் தலீபான்கள் தாக்குதல் நடத்தினர். 

பாதுகாப்பு படையினரின் நிலைகளை குறிவைத்து தலீபான்கள் நடத்திய தாக்குதலில் அரசு படையினர்  11 பேர் உயிரிழந்துள்ளனர். மேலும், பாதுகாப்பு படையினர் நான்கு பேர் பணையக்கைதிகளாக பிடித்துவைக்கப்பட்டுள்ளதாக தலீபான்கள் தெரிவித்துள்ளனர். 


Next Story