உலக செய்திகள்

உலகைச் சுற்றி.... + "||" + .Around the world

உலகைச் சுற்றி....

உலகைச் சுற்றி....
பிரேசிலில் நேற்று ஒரே நாளில் 729 பேர் கொரோனாவுக்கு பலியானதால், அங்கு கொரோனாவால் உயிரிழந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 1 லட்சத்து 49 ஆயிரத்தை நெருங்கியுள்ளது.
* அமெரிக்காவில் மிச்சிகன் மாகாணத்தின் ஆளுநரும் குடியரசு கட்சியைச் சேர்ந்தவருமான கிரெட்சன் விட்மேனை கடத்தும் சதித்திட்டம் வெற்றிகரமாக முறியடிக்கப்பட்டது. இது தொடர்பாக பயங்கரவாத இயக்கத்தைச் சேர்ந்த 13 பேரை போலீசார் கைது செய்து தீவிரமாக விசாரணை நடத்தி வருகின்றனர்.


* தாய்லாந்தின் தெற்குப்பகுதியில் உள்ள பட்டானி மாகாணத்தில் ஆசிரியர்களுக்கும் பாதுகாப்பாக சென்ற போலீஸ் அதிகாரிகள் மீது மர்ம நபர்கள் திடீர் துப்பாக்கிச்சூடு நடத்தியதோடு குண்டு வெடிப்பையும் நிகழ்த்தினர். இதில் ஒரு போலீஸ் அதிகாரி கொல்லப்பட்ட நிலையில் மேலும் 2 போலீசார் படுகாயமடைந்தனர்.

* ரஷியாவின் கிழக்குப்பகுதியில் உள்ள கம்சட்கா தீபகற்பத்தில் நேற்று சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. இது ரிக்டர் அளவுகோலில் 5.9 புள்ளிகளாக பதிவானது. இந்த நிலநடுக்கத்தால் ஏற்பட்ட சேத விவரங்கள் குறித்து உடனடி தகவல்கள் இல்லை.

* பிரேசிலில் நேற்று ஒரே நாளில் 729 பேர் கொரோனாவுக்கு பலியானதால், அங்கு கொரோனாவால் உயிரிழந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 1 லட்சத்து 49 ஆயிரத்தை நெருங்கியுள்ளது. அதேபோல் அந்த நாட்டில் கொரோனா பாதித்தவர்களின் எண்ணிக்கை 50 லட்சத்து 28 ஆயிரத்தை கடந்துள்ளது.

* ஈரான் மீது அமெரிக்கா புதிதாக பொருளாதார தடைகளை விதித்துள்ள நிலையில், ஈரான் வெளியுறவு மந்திரி ஜாவத் ஷாரீப் சீனாவில் பயணம் மேற்கொள்ள இருப்பதாக சீன வெளியுறவு அமைச்சகம் தெரிவித்துள்ளது.

* மெக்சிகோவில் நேற்று ஒரே நாளில் 5,300 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டதன் மூலம் அங்கு கொரோனா பாதித்தவர்களின் மொத்த எண்ணிக்கை 8 லட்சத்தை கடந்துள்ளது.

தொடர்புடைய செய்திகள்

1. உலகைச் சுற்றி....
பிரான்ஸ் நடத்திய விமான வான்வழி தாக்குதலில் திருமண விழா ஒன்றில் பங்கேற்ற விருந்தினர்கள் கொல்லப்பட்டதாக வெளியான தகவல்களை மாலி அரசு மறுத்துள்ளது.
2. உலகைச் சுற்றி....
மைக்ரோசாப்டு’ குறிப்பிட்ட சில பணியாளர்கள் விரும்பினால் அவர்கள் நிரந்தரமாகவே வீட்டிலிருந்து பணியாற்றலாம் என தற்போது அறிவித்துள்ளது.
3. உலகைச் சுற்றி....
ஆப்கானிஸ்தானின் வடக்கு பகுதியில் உள்ள குண்டூஸ் மாகாணத்தில் போலீசாரின் சோதனைச்சாவடியை குறிவைத்து பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் போலீசார் 7 பேர் கொல்லப்பட்டனர்.
4. உலகைச் சுற்றி....
ஆப்கானிஸ்தானில் வரும் கிறிஸ்துமஸ் பண்டிகைக்குள் அமெரிக்க படைகள் முற்றிலுமாக திரும்பப்பெறப்படும் என்று அமெரிக்க ஜனாதிபதி டிரம்ப் நேற்று முன்தினம் அறிவித்தார்.