ஆர்மீனியாவுக்கு 'கடைசி வாய்ப்பு' அமைதிப் பேச்சுவார்த்தையில் அஜர்பைஜான் ஜனாதிபதி எச்சரிக்கை


ஆர்மீனியாவுக்கு கடைசி வாய்ப்பு அமைதிப் பேச்சுவார்த்தையில் அஜர்பைஜான் ஜனாதிபதி எச்சரிக்கை
x
தினத்தந்தி 10 Oct 2020 2:07 AM GMT (Updated: 10 Oct 2020 2:07 AM GMT)

ஆர்மீனியாவுக்கு 'கடைசி வாய்ப்பு' என்று அமைதிப் பேச்சுவார்த்தைகளுக்கு மத்தியில் அஜர்பைஜான் ஜனாதிபதி இல்ஹாம் அலியேவ் கூறி உள்ளார்.

மாஸ்கோ

அஜர்பைஜானுக்கும் ஆர்மீனியாவிற்கும் இடையிலான பேச்சுவார்த்தைகள் ரஷியாவின் தலைநகர் மாஸ்கோவில் தொடங்கியது. அஜர்பைஜான் ஜனாதிபதி இல்ஹாம் அலியேவ், நாகோர்னோ-கராபாக்  சண்டையில் அமைதியைப் பாதுகாக்க ஆர்மீனியாவுக்கு "கடைசி வாய்ப்பு" என்று கூறினார்.

மேலும் அவர் கூறும் போது "நாங்கள் ஆர்மீனியாவுக்கு மோதலை அமைதியாக தீர்ப்பதற்கான வாய்ப்பை வழங்குகிறோம். இது அவர்களின் கடைசி வாய்ப்பு".

பிரச்சினையைத் தீர்ப்பதற்கான ஒரே பாதை நமது பிரதேசங்களின் விடுதலையாகும். நாங்கள் வெற்றி பெறுகிறோம்" போர்க்களத்தில், நாங்கள் எங்கள் நிலங்களை திரும்பப் பெறுவோம், எங்கள் பிராந்திய ஒருமைப்பாட்டை மீட்டெடுப்போம் என கூறினார்

மின்ஸ்க் குழுவின் ஒரு பகுதியாக இருக்கும் ரஷ்யா, பிரான்ஸ் மற்றும் அமெரிக்கா மாஸ்கோவில் போரிடும் இரு நாடுகளுக்கு இடையே சமாதானத்தை ஏற்படுத்த முயற்சித்து வருகின்றன.


Next Story