இந்தியா,அமெரிக்காவை தொடர்ந்து பாகிஸ்தானும், டிக்டாக் செயலிக்கு தடை


இந்தியா,அமெரிக்காவை தொடர்ந்து பாகிஸ்தானும், டிக்டாக் செயலிக்கு தடை
x
தினத்தந்தி 10 Oct 2020 2:39 AM GMT (Updated: 10 Oct 2020 2:39 AM GMT)

இந்தியா,அமெரிக்காவை தொடர்ந்து பாகிஸ்தானும், டிக்டாக் செயலியை பயன்படுத்த தடை விதித்துள்ளது.

இஸ்லாமாபாத்

ஒழுக்கக்கேடான மற்றும் அநாகரீகமான வீடியோக்கள் பகிரப்படுவதாக எழுந்த புகார்களை தொடர்ந்து, சீன செயலியான டிக்டாக்கிற்கு பாகிஸ்தான் தடை விதித்துள்ளது.

சட்டவிரோத ஆன்லைன் பதிவுகளை உடனடியாக நீக்குவதற்கான வழிமுறைகளை, முழுமையாக பின்பற்ற டிக்டாக் நிர்வாகம் தவறிவிட்டதாக பாகிஸ்தான் தொலைத்தொடர்பு ஆணையம் தெரிவித்துள்ளது.

இந்தியா, அமெரிக்காவை தொடர்ந்து, சீனாவின் நேச நாடான பாகிஸ்தானும் டிக்டாக் செயலிக்கு தடை விதித்து இருப்பது குறிப்பிடத்தக்கது.

Next Story