உலக செய்திகள்

உலகைச் சுற்றி.... + "||" + around the world

உலகைச் சுற்றி....

உலகைச் சுற்றி....
ஆப்கானிஸ்தானின் வடக்கு பகுதியில் உள்ள குண்டூஸ் மாகாணத்தில் போலீசாரின் சோதனைச்சாவடியை குறிவைத்து பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் போலீசார் 7 பேர் கொல்லப்பட்டனர்.
* ஆப்கானிஸ்தானின் வடக்கு பகுதியில் உள்ள குண்டூஸ் மாகாணத்தில் போலீசாரின் சோதனைச்சாவடியை குறிவைத்து பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் போலீசார் 7 பேர் கொல்லப்பட்டனர். இந்த தாக்குதலில் மேலும் 4 போலீசார் மாயமாகியுள்ளனர்.

* தென்ஆப்பிரிக்காவின் முன்னாள் அதிபர் ஜேக்கப் ஜூமா மீது ஊழல் வழக்குகள் பதிவு செய்யப்பட்டு விசாரணை நடந்து வரும் நிலையில் இது தொடர்பாக விசாரணைக்குழு முன்பு நேரில் ஆஜராகி விளக்கம் அளிக்க அவருக்கு சம்மன் அனுப்பப்பட்டுள்ளது.

* பிரான்சில் தினசரி கொரோனா பாதிப்பு 20 ஆயிரத்தை நெருங்கி வருகிறது. அதன்படி நேற்று அங்கு ஒரே நாளில் 18 ஆயிரத்து 129 பேருக்கு புதிதாக வைரஸ் பாதிப்பு உறுதி செய்யப்பட்டது. இதன் மூலமாக அந்த நாட்டின் மொத்த கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 6 லட்சத்து 91 ஆயிரத்து 977 ஆக அதிகரித்துள்ளது.

* தீவு நாடான வனுவாட்டுவின் மேற்குப்பகுதியிலுள்ள போர்ட் விலா நகரில் நேற்று சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. இது ரிக்டர் அளவுகோலில் 5.2 புள்ளிகளாக பதிவானது. இந்த நிலநடுக்கத்தால் ஏற்பட்ட சேத விவரங்கள் குறித்து தகவல்கள் இல்லை.

* மெக்சிகோ நாட்டின் ஜலிஸ்கோ மாகாணத்தில் விவசாய பண்ணையில் நடந்த துப்பாக்கிச்சூடு மற்றும் குண்டுவெடிப்பில் 6 பேர் உயிரிழந்தனர். மேலும் 2 பேர் படுகாயம் அடைந்தனர்.

* தென் சீன கடல் பகுதியில் சீனாவின் கட்டுப்பாட்டில் உள்ள ஜிஷா தீவுக்குள் அமெரிக்க போர்க்கப்பல் அத்துமீறி நுழைந்ததாக சீன ராணுவம் குற்றம் சாட்டியுள்ளது. இதற்கு கடும் கண்டனம் தெரிவித்துள்ள சீனா ஆத்திரமூட்டும் நடவடிக்கைகளை நிறுத்திக்கொள்ளுமாறு அமெரிக்காவை வலியுறுத்தியுள்ளது.