பிரேசிலில் கொரோனாவால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 1 லட்சத்து 50 ஆயிரத்து 998 ஆக அதிகரிப்பு


பிரேசிலில் கொரோனாவால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 1 லட்சத்து 50 ஆயிரத்து 998 ஆக அதிகரிப்பு
x
தினத்தந்தி 14 Oct 2020 10:53 PM GMT (Updated: 14 Oct 2020 10:53 PM GMT)

பிரேசிலில் கொரோனாவால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 1 லட்சத்து 50 ஆயிரத்து 998 ஆக அதிகரித்துள்ளது.


* எகிப்தின் வடக்கு பகுதியில் உள்ள சினாய் மாகாணத்தில் ராணுவ வீரர்களின் சோதனைச்சாவடி மீது தாக்குதல் நடத்த முயற்சித்த 2 பயங்கரவாதிகளை போலீசார் சுட்டுக் கொன்றனர். இதன் மூலம் பெரும் அசம்பாவிதம் தவிர்க்கப்பட்டது.

* பிரேசிலில் நேற்று ஒரே நாளில் 309 பேர் கொரோனாவுக்கு பலியானதன் மூலம் அங்கு கொரோனாவால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 1 லட்சத்து 50 ஆயிரத்து 998 ஆக அதிகரித்துள்ளது. அதேபோல் அந்த நாட்டில் கொரோனா பாதித்தவர்களின் மொத்த எண்ணிக்கை 51 லட்சத்து 13 ஆயிரத்தை கடந்துள்ளது.

* லிபியா தலைநகர் திரிபோலியில் இருந்து 90 கி.மீ. தொலைவில் உள்ள தர்ஹுனா நகரில் ராட்சத சவக்குழி கண்டுபிடிக்கப்பட்டது. அதிலிருந்து 9 உடல்கள் மீட்கப்பட்டன. இது கிளர்ச்சி ராணுவத்தின் சதி என ஐ.நா. ஆதரவு பெற்ற லிபியா அரசு குற்றம் சாட்டியுள்ளது.

* கொரோனா சிகிச்சைக்கு பின்னர் தனக்கு புதிய நோய் எதிர்ப்பு சக்தி கிடைத்துள்ளதாகவும், தன்னை ஒரு ‘சூப்பர்மேன்’ போல உணர்வதாகவும் அமெரிக்க ஜனாதிபதி டிரம்ப் தெரிவித்துள்ளார்.

* வியட்நாமில் மழை, வெள்ளம் மற்றும் அதனால் ஏற்பட்ட பயங்கர நிலச்சரிவில் சிக்கி உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 36 ஆக அதிகரித்துள்ளது. மேலும் 12 பேர் மாயமாகி உள்ளனர் அவர்களின் கதி என்ன என்பது தெரியவில்லை.


Next Story