லண்டன் இன்று இரவு முதல் இரண்டாவது அடுக்கு கொரோனா வைரஸ் கட்டுப்பாடு பகுதிக்குள் செல்கிறது


லண்டன் இன்று இரவு முதல் இரண்டாவது அடுக்கு கொரோனா வைரஸ் கட்டுப்பாடு பகுதிக்குள் செல்கிறது
x
தினத்தந்தி 15 Oct 2020 9:40 AM GMT (Updated: 15 Oct 2020 9:40 AM GMT)

இங்கிலாந்தில் உள்ள கொரோனா வைரஸ் ஹாட்ஸ்பாட்களில் இருக்கும் மக்கள் ஸ்காட்லாந்துக்கு பயணம் மேற்கொள்ள வேண்டாம் என அந்நாட்டு முதலமைச்சர் நிக்கோலா ஸ்டர்ஜன்

லண்டன்

லண்டன் வெள்ளிக்கிழமை நள்ளிரவு முதல் இரண்டாவது அடுக்கு  கொரோனா வைரஸ் கட்டுப்பாடுகளின் கீழ் வைக்கப்பட உள்ளது.  லண்டன் அடுக்கு 2 கொரோனா வைரஸ் கட்டுப்பாடுகளுக்கு மாற்றப்படும் என்று தலைநகரில் உள்ள பாராளுமன்ற உறுப்பினர்கள் கூறியுள்ளனர், சுமார் 90 லட்சம் மக்களை புதிய, கடுமையான கட்டுப்பாடுகளுக்கு உட்படுத்தியுள்ளனர். 

இங்கிலாந்தில் உள்ள கொரோனா வைரஸ் ஹாட்ஸ்பாட்களில் இருக்கும் மக்கள் ஸ்காட்லாந்துக்கு பயணம் மேற்கொள்ள வேண்டாம் என அந்நாட்டு முதலமைச்சர் நிக்கோலா ஸ்டர்ஜன் அறிவுறுத்தியுள்ளார்.

இங்கிலாந்து, வேல்ஸ், ஸ்காட்லாந்து, வடக்கு அயர்லாந்து ஆகிய 4 நாடுகளை இணைந்து உள்ளடக்கியது. இந்த நிலையில், இங்கிலாந்தில் அதிக ஆபத்துள்ள பகுதிகளுக்குச் செல்ல வேண்டாம் என நாட்டு மக்களுக்கு ஸ்காட்லாந்து முதலமைச்சர் நிக்கோலா ஸ்டர்ஜன் ஸ்காட்ஸுக்கு அறிவுறுத்தியுள்ளார்.அதிக ஆபத்துள்ள பகுதிகளில் இருக்கும் மக்கள் இங்கிலாந்தின்  மற்ற நாடுகளுக்கு செல்வதை தடுக்கும் வகையில் இங்கிலாந்து அரசாங்கம் பயணக் கட்டுப்பாடுகளை அறிமுகப்படுத்த வேண்டும் என வேல்ஸ் முதலமைச்சர் மார்க்டாக்போர்டு  அழைப்பு விடுத்துள்ளதற்கு தான் ஆதரவு தெரிவிப்பதாக நிக்கோலா ஸ்டர்ஜன் தெரிவித்துள்ளார்.

இங்கிலாந்தில் உள்ள ஆபத்தான பகுதிகளைச் சேர்ந்தவர்கள் ஸ்காட்லாந்திற்குப் பயணம் செய்ய வேண்டாம் என நிக்கோலா கேட்டுக்கொண்டுள்ளார்.இந்த விவகாரம் தொடர்பாக அவசர பேச்சுவார்த்தை நடத்த பிரதமர் போரிஸ் ஜான்சனுக்கு கடிதம் எழுதுவதாக அவர் கூறினார்.


Next Story