உலக செய்திகள்

பாகிஸ்தானில் அரசாங்க எதிர்ப்பு பேரணிக்கு முன்னதாக 450 க்கும் மேற்பட்ட தொண்டர்கள் மீது வழக்கு + "||" + Over 450 Opposition workers booked ahead of anti-government rally in Pakistan

பாகிஸ்தானில் அரசாங்க எதிர்ப்பு பேரணிக்கு முன்னதாக 450 க்கும் மேற்பட்ட தொண்டர்கள் மீது வழக்கு

பாகிஸ்தானில் அரசாங்க எதிர்ப்பு பேரணிக்கு முன்னதாக  450 க்கும் மேற்பட்ட தொண்டர்கள் மீது வழக்கு
பாகிஸ்தானில் அரசாங்க எதிர்ப்பு பேரணிக்கு முன்னதாக 450 க்கும் மேற்பட்ட எதிர்க்கட்சி தொண்டர்கள் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டு உள்ளது.
இஸ்லாமாபாத்

பாகிஸ்தான் நாட்டின் 11 எதிர்க்கட்சிகளை உள்ளடக்கிய கூட்டணியான பாகிஸ்தான் ஜனநாயக இயக்கம் (பி.டி.எம்) பிரதமர் இம்ரான் கான் தலைமையிலான பி.டி.ஐ அரசாங்கத்திற்கு எதிராக முதல் பிரச்சார கூட்டம் நாளை தொடங்க உள்ளது.

முதல் அரசாங்க எதிர்ப்பு பேரணி லாகூரிலிருந்து 80 கி.மீ தூரத்தில் உள்ள குஜ்ரான்வாலா நகரில் வெள்ளிக்கிழமை திட்டமிடப்பட்டுள்ளது, அதனைத் தொடர்ந்து அக்டோபர் 18 அன்று கராச்சியில், அக்டோபர் 25 ஆம் தேதி குவெட்டாவில், நவம்பர் 22 அன்று பெஷாவர், நவம்பர் 30 அன்று முல்தான், பின்னர் ஒரு பேரணி டிசம்பர் 13 அன்று லாகூரில் நடைபெறும்.

இந்த நிலையில்பிரதமர் இம்ரான் கானுக்கு எதிரான  முதல் மாபெரும் பேரணிக்கு முன்னதாக பாகிஸ்தானின் எதிர்க்கட்சிகளைச் சேர்ந்த 450 க்கும் மேற்பட்ட தொண்டர்கள் மீது லாகூர் மற்றும் பஞ்சாப் மாகாணத்தின் பிற பகுதிகளில் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.

செப்டம்பர் 20 அன்று, 11 முக்கிய எதிர்க்கட்சிகளின் தலைவர்கள் பாகிஸ்தான் ஜனநாயக இயக்கம் (பி.டி.எம்) அமைப்பதாகவும், மூன்று கட்ட அரசு எதிர்ப்பு இயக்கத்தை நாடு முழுவதும் பொதுக் கூட்டங்கள், எதிர்ப்பு ஆர்ப்பாட்டங்கள் மற்றும் பேரணிகளுடன் தொடங்கி ஒரு செயல் திட்டத்தின் கீழ் தொடங்குவதாகவும் அறிவித்தனர். ஜனவரி 2021 இல் இஸ்லாமாபாத்தை நோக்கி நீண்ட அணிவகுப்பு பேரணி நடைபெற உள்ளது.

நாட்டின் சமீபத்திய வரலாற்றில் முதல் முறையாக அரசியல் மற்றும் தேர்தல்களில் இராணுவம் தலையிடுவதை எதிர்க்கட்சிகள் வெளிப்படையாக எதிர்க்கின்றன.


தொடர்புடைய செய்திகள்

1. பாகிஸ்தானில் குண்டுவெடிப்பு: 7 பேர் பலி
பாகிஸ்தானில் நடந்த குண்டுவெடிப்பில் 7 பேர் பலியாகியுள்ளனர்.
2. ஜம்மு காஷ்மீர்: பாகிஸ்தான் டிரோனை சுட்டு வீழ்த்தியது இந்திய ராணுவம்
இந்திய எல்லைக்குள் பறந்த பாகிஸ்தான் ராணுவத்தின் குவாட்காப்டர் எனப்படும் டிரோனை இந்திய ராணுவம் சுட்டு வீழ்த்தியது.
3. பிரிக்கப்பட்ட தலைகள் ஒட்டிப்பிறந்த இரட்டையர்கள் பாகிஸ்தான் திரும்பினர்.
பிரிக்கப்பட்ட தலைகள் ஒட்டிப்பிறந்த இரட்டையர்கள் தங்களது சொந்த நாடான பாகிஸ்தானுக்கு திரும்பினர்.
4. பாகிஸ்தானில் ராணுவம்- சிந்து மாகாண காவல் துறை இடையே பதற்றம்
பாகிஸ்தானில் ராணுவம் - போலீசார் இடையே ஏற்பட்ட மோதலில் போலீஸ் தரப்பில் 10 உயிரிழந்ததாக ஏ.என்.ஐ செய்தி வெளியிட்டுள்ளது.
5. ஆப்கானிஸ்தானில் பாகிஸ்தான் தூதரகத்தில் ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி 15 பெண்கள் பலி
ஆப்கானிஸ்தானில் பாகிஸ்தான் தூதரகத்தில் ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி 15 பெண்கள் பலியானார்கள்