உலக செய்திகள்

வடகொரியாவின் ஏவுகணை உலக பாதுகாப்பிற்கு மிகப்பெரும் அச்சுறுத்தல் - பென்டகன் எச்சரிக்கை + "||" + North Korea's nuclear, missile programs 'serious threat' to security: Pentagon chief

வடகொரியாவின் ஏவுகணை உலக பாதுகாப்பிற்கு மிகப்பெரும் அச்சுறுத்தல் - பென்டகன் எச்சரிக்கை

வடகொரியாவின் ஏவுகணை உலக பாதுகாப்பிற்கு மிகப்பெரும் அச்சுறுத்தல் - பென்டகன்  எச்சரிக்கை
வடகொரியாவின் ஏவுகணை உலக பாதுகாப்பிற்கு மிகப்பெரும் அச்சுறுத்தல் என அமெரிக்க பாதுகாப்புத்துறை செயலாளர் மார்க் எஸ்பர் தெரிவித்துள்ளது சர்வதேச அளவில் பெரும் அதிர்வலையை ஏற்படுத்தியுள்ளது.
வாஷிங்டன்

சில தினங்களுக்கு முன்னர் வட கொரியாவின் ஆளும் கட்சியின் ஆண்டு விழாவினையொட்டி, ராணுவ அணிவகுப்புகள் நடத்தப்பட்டன. இதில் அதிநவீன ஹவாசாங் -16 என்ற புதிய ஏவுகணையை வடகொரியா அறிமுகப்படுத்தியது. 

இந்நிலையில், பென்டகனில் தென் கொரிய பாதுகாப்பு மந்திரி சு வூக்குடனான சந்திப்பு தொடங்குவதற்கு முன்பு பேசிய எஸ்பர், வட கொரியாவின் அணு மற்றும் பாலிஸ்டிக் ஏவுகணை திட்டங்கள் பிராந்தியத்தின் மற்றும் உலகின் பாதுகாப்பு மற்றும் ஸ்திரத்தன்மைக்கு கடுமையான அச்சுறுத்தலாக இருப்பதை நாங்கள் ஒப்புக்கொள்கிறோம். கொரிய நாடுகளின் பாதுகாப்பில் அமெரிக்கா உறுதியாக உள்ளது" என்று கூறியுள்ளார்.

வட கொரிய தலைவர் கிம் ஜாங் உடனான தனது உறவைப் பற்றி கூறியுள்ள அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப், தெற்கில் நிலைநிறுத்தப்பட்டுள்ள அமெரிக்க இராணுவப் படைகளின் செலவில் பெரும் பங்கை தென்கொரியா செலுத்த வேண்டும் என்று கூறியுள்ளார்.

தென் கொரியாவில் சுமார் 28,500 அமெரிக்க துருப்புக்கள் நிறுத்தப்பட்டுள்ளன, இது வட கொரியாவுக்கு ஒரு தடுப்பாகக் கருதப்படுகிறது. இது ஆசியாவில் அமெரிக்காவின் செல்வாக்கு மற்றும் திறனைப் பற்றி சீனாவிற்கு மறைமுகமாக சவால் விடுக்கின்றது.

தென் கொரியாவின் தேசிய பாதுகாப்பு ஆலோசகர் சு ஹூனும் இந்த வாரம் வாஷிங்டனில் தனது அமெரிக்காவுடன் அறிவிக்கப்படாத சந்திப்புகளுக்காக சென்றுள்ளார் என்று தென் கொரியாவின் ஜனாதிபதி அலுவலகம் சமீபத்தில் தெரிவித்திருந்தது.


தொடர்புடைய செய்திகள்

1. அத்துமீறி கடல் எல்லைக்குள் நுழைந்த அமெரிக்க போர்க்கப்பலை விரட்டி அடித்த ரஷிய போர்க்கப்பல்
அத்துமீறி தங்களது கடல் எல்லைக்குள் நுழைந்த அமெரிக்க போர்க்கப்பலை ரஷிய போர்க்கப்பல் துரத்திச் சென்ற விரட்டித்ததாக அந்நாட்டு பாதுகாப்பு அமைச்சகம் தெரிவித்துள்ளது.
2. அமெரிக்க கடற்படை அதிகாரி தைவானுக்கு திடீர் பயணம்?
அமெரிக்க கடற்படை அதிகாரி, முன் அறிவிப்பு இன்றி தைவானுக்கு திடீர் பயணம் மேற்கொண்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
3. போயிங் 737 மேக்ஸ் விமானங்கள்: 20 மாதங்களாக நீடித்த தடை முடிவுக்கு வந்தது
எத்தியோப்பியாவில் ‘போயிங் 737 மேக்ஸ் 8’ ரக விமானம் கடந்த ஆண்டு மார்ச் 10ம் தேதி விபத்துக்குள்ளானதில் இந்தியர்கள் உள்பட 157 பேர் உயிரிழந்தனர். முன்னதாக இதே ரக விமானம் இந்தோனேசியாவில் 2018ம் ஆண்டு அக்டோபர் 29ம் தேதி விபத்துக்குள்ளானதில் 189 பேர் பலியாகினர்.
4. டிரம்ப் எங்களுடன் ஒத்துழைக்காவிட்டால் கொரோனாவால் உயிரிழப்போர் எண்ணிக்கை அதிகரிக்கும் ஜோ பைடன் எச்சரிக்கை
டொனால்டு டிரம்ப் எங்களுடன் ஒத்துழைக்காவிட்டால் கொரோனாவால் உயிரிழப்போர் எண்ணிக்கை அதிகரிக்கும் என புதிதாக தேர்ந்து எடுக்கப்பட்ட ஜோ பைடன் எச்சரிக்கை விடுத்து உள்ளார்.
5. அமெரிக்காவில் படிக்கும் இந்திய மாணவர்களின் எண்ணிக்கை கணிசமாக குறைந்து உள்ளது
அமெரிக்காவில் படிக்கும் இந்திய மாணவர்களின் எண்ணிக்கை 4.4 சத்வீதம் குறைந்து உள்ளது என அறிக்கை ஒன்று சுட்டிக்காட்டுகிறது.