பிரான்சில் கொரோனா பரவலை தடுக்க இன்று முதல் இரவு நேர ஊரடங்கு அமல்


பிரான்சில் கொரோனா பரவலை தடுக்க இன்று முதல் இரவு நேர ஊரடங்கு அமல்
x
தினத்தந்தி 15 Oct 2020 11:02 PM GMT (Updated: 15 Oct 2020 11:02 PM GMT)

பிரான்சில் பாரீஸ் உள்ளிட்ட நகரங்களில் கொரோனா பரவலை தடுக்க இன்று முதல் இரவு நேர ஊரடங்கு அமல்படுத்தப்படுகிறது.


* அமெரிக்காவில் திபெத் பிரச்சினைகளை கவனிப்பதற்காக சிறப்பு ஒருங்கிணைப்பாளராக ராபர்ட் ஏ டெஸ்ட்ரோ என்பவரை நியமித்துள்ளதாக வெளியுறவு மந்திரி மைக் பாம்பியோ அறிவித்துள்ளார். இவர் திபெத்தியர்கள் தொடர்பான மனிதநேய விஷயங்களையும் பார்த்துக்கொள்வார் என அறிவிக்கப்பட்டுள்ளது.

* சர்வதேச விண்வெளி மையத்தில் ஆக்சிஜன் உற்பத்தி முறை தோல்வி அடைந்துள்ளது. அதே நேரத்தில் அங்கு ஆக்சிஜன் கையிருப்பு உள்ளது என தகவல்கள் கூறுகின்றன.

* சூடான் துறைமுக நகரான சுவாகினில் பழங்குடியினர்கள் இடையே ஏற்பட்ட மோதல், வன்முறையில் 6 பேர் உயிரிழந்தனர். 20 பேர் படுகாயம் அடைந்தனர்.

* அமெரிக்காவும், தென்கொரியாவும் வலுவான ராணுவ நட்பு நாடுகளாக உள்ளன. இவ்விரு நாடுகளும் வடகொரியா தனது அணு மற்றும் கண்டம் விட்டு கண்டம் பாயும் ஏவுகணைகளை அகற்றுவதற்கான குறிக்கோளில் உறுதியாக உள்ளன என்று அமெரிக்க ராணுவ மந்திரி மார்க் எஸ்பர் கூறினார்.

* பிரான்சில் பாரீஸ் உள்ளிட்ட நகரங்களில் கொரோனா பரவலை தடுக்க இன்று முதல் இரவு நேர ஊரடங்கு போடப்படுவதாக அந்த நாட்டின் அதிபர் மேக்ரான் அறிவித்துள்ளார்.

* நாகோர்னோ-கராபாக் என்னும் சர்ச்சைக்குரிய பகுதிக்காக அஜர்பைசானுடனான போரில் தனது படைகள் கணிசமான உயிரிழப்பை சந்தித்துள்ளதாக ஆர்மீனியா பிரதமர் நிகோல் பாஷினியன் ஒப்புக்கொண்டுள்ளார்.


Next Story