உலக செய்திகள்

பெலாரஸ் எதிர்க்கட்சி தலைவர் ஸ்வியட்லானா சிகானவுஸ்காயா தேடப்படுபவர்கள் பட்டியலில் சேர்ப்பு + "||" + Lukashenko regime in Belarus puts opposition leader Sviatlana Tsikhanouskaya on 'wanted list'

பெலாரஸ் எதிர்க்கட்சி தலைவர் ஸ்வியட்லானா சிகானவுஸ்காயா தேடப்படுபவர்கள் பட்டியலில் சேர்ப்பு

பெலாரஸ் எதிர்க்கட்சி தலைவர் ஸ்வியட்லானா சிகானவுஸ்காயா தேடப்படுபவர்கள் பட்டியலில் சேர்ப்பு
சட்டம் ஒழுங்கை சீர் குலைக்க முயன்றதாக பெலாரஸ் எதிர்க்கட்சி தலைவர் ஸ்வியட்லானா சிகானவுஸ்காயா தேடப்படுபவர்கள் பட்டியலில் சேர்க்கப்பட்டு உள்ளார்.
பெலாரஸ்

பெலாரஸ் நாட்டில் 1994 முதல் ஆட்சியில் இருக்கும் ஜனாதிபதி லுகாஷென்கோவுக்கு எதிராக  பெரிய அளவில் போராட்டங்கள் நடைபெற்று வருகின்றன. நாட்டில் அரசாங்க எதிர்ப்பு ஆர்ப்பாட்டங்களில் பலர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

பெலாரஸ் ஜனாதிபதி லுகாஷென்கோவின் அரசுக்கு எதிராக எதிர்க்கட்சித் தலைவர் ஸ்வியட்லானா சிகானவுஸ்காயா போராட்டத்திற்கு அழைப்பு விடுத்து உள்ளார்.

ஸ்வியட்லானா சிகானவுஸ்காயா அக்டோபர் 25 க்குள் லுகாஷென்கோ விலகுவதற்கும் "அரச பயங்கரவாதத்தை" நிறுத்துவதற்கும் இறுதி எச்சரிக்கை விடுத்திருந்தார். "அக்டோபர் 25 க்குள் எங்கள் கோரிக்கைகள் நிறைவேற்றப்படாவிட்டால், முழு நாடும் அமைதியான போராட்டம் நடக்கும்" என்ற  ஒரு அறிக்கையில் கூறியிருந்தார்.

உங்களுக்கு 13 நாட்கள் உள்ளன அக்டோபர் 26 ஆம் தேதி அனைத்து நிறுவனங்களிலும் நாடு தழுவிய வேலைநிறுத்தம் தொடங்கும், அனைத்து சாலைகளும் மறிக்கப்படும், மேலும் அரசு கடைகளில் விற்பனை சரிந்துவிடும்" என்று அவர் மேலும் கூறி இருந்தார்.

இந்த நிலையில் சட்டம் ஒழுங்கை சீர் குலைக்க அழைப்பு விடுத்ததாக பெலாரஸ் அரசாங்கத்தால் ஸ்வியட்லானா சிகானவுஸ்காயாவை தேடப்படுபவர்கள் பட்டியலில் சேர்த்ததாக ரஷியாவின் அரசுக்கு சொந்தமான ஆர்ஐஏ செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது.

லுகாஷென்கோவால் உரிமை கோரப்பட்ட ஆகஸ்ட் 9 தேர்தல்களுக்குப் பிறகு சிகானவுஸ்காயா லித்துவேனியாவுக்கு தப்பி ஓடிவிட்டார். சிகானவுஸ்காயா பின்னர் பெர்லின் சென்றார் அங்கு அவர் லுகாஷென்கோவை நீக்குமாறு கேடு மேர்க்கலை கேட்டு கொண்டார்.

ஸ்வியாட்லானாவின் கணவர் செர்ஜி டிகானோவ்ஸ்கி லுகாஷென்கோவின் ஆட்சியால் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.


தொடர்புடைய செய்திகள்

1. சீனாவுடன் ராணுவக் கூட்டணி வைக்க தற்போதைய நிலையில் தேவையில்லை ரஷிய அதிபர் புதின்
சீனா மற்றும் ரஷியா இடையே ராணுவ ரீதியிலான உறவு உள்ளது, இதே நிலை நீடித்தால் எதிர்காலத்தில் கூட்டணி ஏற்படுவதற்கான சாத்தியம் அதிகம் இருப்பதாக ரஷிய அதிபர் புதின் அறிவித்துள்ளார்.
2. 3 விண்வெளி வீரர்களுடன் 3 மணி நேரத்தில் சர்வதேச விண்வெளி நிலையத்தை சென்றடைந்த ரஷிய விண்கலம்
3 விண்வெளி வீரர்களுடன் சர்வதேச விண்வெளி நிலையத்தை நோக்கி சீறி பாய்ந்த ரஷிய விண்கலம் 3 மணி நேரத்தில் சென்றடைந்து புதிய மைல்கல்லை எட்டியுள்ளது.
3. கொரோனா காரணமாக ரஷியாவின் எஸ் -400 அமைப்புகளை இந்தியாவுக்கு வழங்குவதில் எந்த பாதிப்பும் இருக்காது -ரஷியாவுக்கான இந்திய தூதர்
கொரோனா வைரஸ் பரவல் காரணமாக ரஷியாவின் எஸ் -400 வான் பாதுகாப்பு அமைப்புகளை இந்தியாவுக்கு வழங்குவதில் எந்த பாதிப்பும் இருக்காது என ரஷியாவுக்கான இந்திய தூதர் வெங்கடேஷ் வர்மா தெரிவித்து உள்ளார்.
4. ஆழ்ந்து உறங்கிய இளம்பெண்: வாய் வழியாக உடலுக்குள் நுழைந்த 4 அடி உயிரினம் ; மருத்துவர்கள் அதிர்ச்சி
ஆழ்ந்து உறங்கிய இளம்பெண்ணின் வாய் வழியாக நுழைந்த உயிரினம் வெளியே எடுத்தபோது அலறிய மருத்துவர்கள்
5. கொரோனா தடுப்பூசி உற்பத்தியில் இந்தியாவின் ஒத்துழைப்பை ரஷியா நாடுகிறது
கொரோனா தடுப்பூசி உற்பத்தியில் இந்தியாவின் ஒத்துழைப்பை ரஷியா நாடுவதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.