உலக செய்திகள்

ரஷ்யாவில் புதிதாக 15,150 ​பேருக்கு கொரோனா + "||" + Russia's new coronavirus cases surge to record high of 15,150

ரஷ்யாவில் புதிதாக 15,150 ​பேருக்கு கொரோனா

ரஷ்யாவில் புதிதாக 15,150 ​பேருக்கு கொரோனா
உலக அளவில் கொரோனா வைரஸ் தொற்று அதிகம் பாதிக்கப்பட்ட நாடுகளில் அமெரிக்கா, பிரேசில், இந்தியாவைத் தொடர்ந்து 4 ஆம் இடத்தில் ரஷ்யா உள்ளது.
மாஸ்கோ,

ரஷ்யாவில் கடந்த 24 மணி நேரத்தில் 15,150 ​பேருக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதி ஆகியுள்ளது. மேலும், 232 பேர் கொரோனாவுக்கு உயிரிழந்துள்ளனர்.  தலைநகர் மாஸ்கோவில் மட்டும் 5 ஆயிரத்து 49 பேருக்கு ஒரே நாளில் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

இந்த தகவலை அந்நாட்டு சுகாதார அமைப்பு வெளியிட்டுள்ளது. ரஷ்யாவில் இதுவரை கொரோனா பாதித்தவர்கள் எண்ணிக்கை 13,69,313 ஆக அதிகரித்துள்ளது.  இதுவரை  உயிரிழந்தவர்கள் எண்ணிக்கை 23,723 ஆக உயர்ந்துள்ளது.

கொரோனாவில் இருந்து இதுவரை குணம் அடைந்தவர்கள் எண்ணிக்கை   10 லட்சத்து 56 ஆயிரத்து 582 ஆக உள்ளது.  தற்போதைய நிலவரப்படி ரஷ்யாவில் தொற்று பாதிப்புடன் சிகிச்சை பெறுபவர்கள் எண்ணிக்கை  2,89,008  ஆக உள்ளது.  

தொடர்புடைய செய்திகள்

1. மத்திய பிரதேச மாநிலத்தில் இன்று 1,450 பேருக்கு கொரோனா தொற்று உறுதி
மத்திய பிரதேச மாநிலத்தில் இன்று புதிதாக 1,450 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
2. ரஷ்யாவில் ஒரேநாளில் அதிக அளவாக புதிதாக 28,145 பேருக்கு கொரோனா பாதிப்பு
ரஷ்யாவில் கொரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை தற்போது 23.7 லட்சத்தைக் கடந்துள்ளது.
3. மேற்கு வங்காளத்தில் இன்று மேலும் 3,271 பேருக்கு கொரோனா தொற்று உறுதி
மேற்கு வங்காளத்தில் இன்று மேலும் 3,271 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
4. ரஷ்யாவில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 23.4 லட்சமாக அதிகரிப்பு
ரஷியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 25,345 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
5. கர்நாடகாவில் இன்று மேலும் 1,330 பேருக்கு கொரோனா தொற்று உறுதி
கர்நாடகாவில் கொரோனா தொற்றால் பாதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கை கணிசமாக குறைந்து வருகிறது.