வியட்நாமில் வெள்ளம், நிலச்சரிவுகளில் சிக்கி பலியானோரின் எண்ணிக்கை 55 ஆக உயர்வு


வியட்நாமில் வெள்ளம், நிலச்சரிவுகளில் சிக்கி பலியானோரின் எண்ணிக்கை 55 ஆக உயர்வு
x
தினத்தந்தி 16 Oct 2020 5:52 PM IST (Updated: 16 Oct 2020 5:52 PM IST)
t-max-icont-min-icon

வியட்நாமில் வெள்ளம், நிலச்சரிவுகளில் சிக்கி பலியானோரின் எண்ணிக்கை 55 ஆக உயர்ந்துள்ளது.

ஹனோய்,

மத்திய வியட்நாமில் கடந்த 3 ஆம் தேதி முதல் 13ஆம் தேதி வரை இடைவிடாத கனமழை பெய்தது. இதனால் மத்திய வியட்நாம் உள்ளிட்ட பகுதிகள் கடுமையாக பாதிக்கப்பட்டன.  கனமழை காரணமாக பல்வேறு பகுதிகளில் வெள்ளப்பெருக்கு மற்றும் நிலச்சரிவுகளும் ஏற்பட்டுள்ளன. இந்த இயற்கை சீற்றங்களில் சிக்கி இதுவரை 55 பேர் பலியாகியுள்ளனர். மேலும் 7 பேரைக் காணவில்லை என்று இயற்கை பேரிடர் தடுப்பு மையம் தெரிவித்துள்ளது. 

மேலும் 900 ஹெக்டேர் நெல் வயல்களும், 5,500 ஹெக்டேருக்கு மேற்பட்ட பிற பயிர் நிலங்களும் நீரில் மூழ்கின. 4,45,700 கால்நடைகள் மற்றும் விலங்குகள் வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டன. வெள்ளத்தில் சிக்கி மாயமானவர்களை மீட்புக் குழுவினர் தேடி வருகின்றனர். வெள்ளம் பாதித்த இடங்களில் மீட்புப்பணிகள் முழு வீச்சில் நடைபெற்று வருகின்றன. 

இதனிடையே மத்திய வியட்நாமில் இன்று முதல் அக்.21 வரை மீண்டும் கனமழைக்கு வாய்ப்பு உள்ளது என்று அந்நாட்டு வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

Next Story