உலக செய்திகள்

பிரான்சில் வேகமெடுக்கும் வைரஸ் பரவல்- இன்று முதல் 30 நாட்களுக்கு அவசரநிலை + "||" + France Reports Over 30,000 New COVID-19 Cases In 24 Hours

பிரான்சில் வேகமெடுக்கும் வைரஸ் பரவல்- இன்று முதல் 30 நாட்களுக்கு அவசரநிலை

பிரான்சில் வேகமெடுக்கும் வைரஸ் பரவல்- இன்று முதல் 30 நாட்களுக்கு அவசரநிலை
பிரான்சில் கடந்த சில நாட்களாக தினசரி கொரோனா பாதிப்பு உச்சத்தில் இருந்து வருகிறது
பாரீஸ், 

பிரான்சில் கொரோனா வைரஸ் பரவல் மிகவும் தீவிரமடைந்துள்ளது. அங்கு கடந்த சில நாட்களாக தினசரி கொரோனா பாதிப்பு உச்சத்தில் இருந்து வருகிறது. இதில் அதிகபட்சமாக நேற்று ஒரே நாளில் 30 ஆயிரத்து 621 பேருக்கு புதிதாக கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது.

இதன் மூலம் அந்த நாட்டில் கொரோனா பாதித்தவர்களின் மொத்த எண்ணிக்கை 8 லட்சத்து 9 ஆயிரத்து 684 ஆக அதிகரித்துள்ளது. அதேபோல் அங்கு கடந்த 24 மணி நேரத்தில் 88 பேர் கொரோனாவால் உயிரிழந்த நிலையில், மொத்த கொரோனா பலி எண்ணிக்கை 33 ஆயிரத்து 125 ஆக உயர்ந்துள்ளது.

நிலைமை நிச்சயமாக மோசமடைந்து வருவதாக எச்சரித்த பிரதமர் ஜீன் காஸ்டெக்ஸ், கொரோனா பரவலை கட்டுப்படுத்துவதற்கு ஏதுவாக இன்று (சனிக்கிழமை) முதல் நாடு முழுவதும் 30 நாட்களுக்கு அவசர நிலை அமலில் இருக்கும் என்று தெரிவித்தார்.

அதேபோல் தலைநகர் பாரீஸ் உட்பட முக்கிய 8 நகரங்களில் இரவு 9 மணி முதல் அதிகாலை இரவு நேர ஊரடங்கு அமல்படுத்தப்படுவதாகவும், இது 4 வாரங்களுக்கு அமலில் இருக்குமென்றும் அவர் தெரிவித்தார்.

தொடர்புடைய செய்திகள்

1. மேற்கு வங்காளத்தில் இன்று மேலும் 3,271 பேருக்கு கொரோனா தொற்று உறுதி
மேற்கு வங்காளத்தில் இன்று மேலும் 3,271 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
2. கர்நாடகாவில் இன்று மேலும் 1,330 பேருக்கு கொரோனா தொற்று உறுதி
கர்நாடகாவில் கொரோனா தொற்றால் பாதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கை கணிசமாக குறைந்து வருகிறது.
3. கொரோனா தொற்றில் இருந்து விடுபட்ட தேசியவாத காங்கிரஸ் எம்.எல்.ஏ. மரணம்
கொரோனா தொற்றில் இருந்து விடுபட்ட தேசியவாத காங்கிரஸ் எம்.எல்.ஏ. பரத் பால்கே உடல்நல குறைவால் காலமானார்.
4. டெல்லியில் புதிதாக 6,224- பேருக்கு கொரோனா தொற்று
டெல்லியில் கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 6 ஆயிரத்து 224- பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
5. சீனாவில் 3 நகரங்களில் புதிதாக கொரோனா பாதிப்பு : லட்சக்கணக்கானோருக்கு பரிசோதனை
உலகில் முதன் முதலாக தொற்று பாதிப்பு வெளிப்பட்ட சீனாவில், இதுவரை 86 ஆயிரம் பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது.