உலக செய்திகள்

எதிரி நாடுகளுக்கு மரண பயத்தை காட்டும் புதிய ஆயுதம் தற்கொலைப்படை ஆளில்லா விமானங்கள் + "||" + China is practicing unleashing swarms of suicide drones packed with explosives from the backs of trucks

எதிரி நாடுகளுக்கு மரண பயத்தை காட்டும் புதிய ஆயுதம் தற்கொலைப்படை ஆளில்லா விமானங்கள்

எதிரி நாடுகளுக்கு மரண பயத்தை காட்டும் புதிய ஆயுதம் தற்கொலைப்படை ஆளில்லா விமானங்கள்
எதிரி நாடுகளுக்கு மரண பயத்தை காட்டும் புதிய ஆயுதம் தற்கொலைப்படை ஆளில்லா விமானங்களை தயாரித்து உள்ளது.
பீஜிங்

எதிரி நாடுகளுக்கு மரண பயத்தை காட்டும் புதிய ஆயுதம் ஒன்றை சீனா காணொளி வடிவில் வெளியிட்டு பகீர் கிளப்பியுள்ளது.

லாரி ஒன்றில் பொருத்தப்பட்டுள்ள அந்த ஆயுதமானது, ஆளில்லா குட்டி விமானங்களை ஏவும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது.அந்த வெடிகுண்டுகள் குட்டி விமானங்கள் போர்முனையில் எதிரி நாடுகளின் ராணுவ டாங்கிகள் அல்லது ராணுவ முகாம்கள் மீது  தாக்குதலை தொடுக்கும் என கூறப்படுகிறது. இந்த கதிகலங்கவைக்கும் ஆயுதத்தை ஹெலிகொப்டர் மூலம் எங்கு வேண்டுமானாலும் எடுத்துச் செல்லலாம் என்பது சிறப்பு.

தைவானுக்கு எதிராக தற்போது ராணுவப் பயிற்சியை முன்னெடுத்திருக்கும் சீனா அச்சுறுத்தும் இந்த புதிய ஆயுதத்தை அறிமுகம் செய்துள்ளது.ஒரே நேரத்தில் 48 ஆயுதம் தாங்கிய ஆளில்லா குட்டி விமானத்தை இதன் மூலம் ஏவ முடியும் என கூறப்படுகிறது.ஒவ்வொரு குட்டி விமானமும் பேரழிவை ஏற்படுத்தும் ஆயுதத்துடன் ஏவப்படுகிறது. இதனால் கண்ணிமைக்கும் நேரத்தில் பேரழிவை ஏற்படுத்த முடியும்.

மேலும் 40 நிமிடங்கள் வரை வானத்தில் பறந்து இலக்கை எட்டும் வகையில் இந்த புதிய ரக ஆயுதம் வடிவமைக்கப்பட்டுள்ளது.மட்டுமின்றி, ஒரு ராணுவ வீரரால், இந்த குட்டி விமானங்கள் கண்காணிக்கப்பட்டு, கட்டுப்படுத்தப்படுவதாகவும் கூறப்படுகிறது.


தொடர்புடைய செய்திகள்

1. கிழக்கு லடாக்கில் ராணுவ வீரர்களுக்கு புதிய தொழில்நுட்ப உபகரணங்கள்- சீனா அறிவிப்பு
கிழக்கு லடாக்கில் கடும் குளிரை தாக்குப்பிடிக்கும் வகையில் ராணுவ வீரர்களுக்கு புதிய தொழில்நுட்ப உபகரணங்கள் வழங்கப்பட்டுள்ளதாக சீன அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
2. இந்தியாவுடனான எல்லை பிரச்சினையில் மூன்றாம் தரப்புக்கு இடமில்லை; சீனா கொந்தளிப்பு
இந்திய மக்கள் அச்சுறுத்தல்களை சந்திப்பதால், அமெரிக்கா அவர்களுடன் நிற்கும் என சீனாவை குறிவைத்து அமெரிக்க வெளியுறவுத்துறை மந்திரி நேற்று பேசியிருந்தார்.
3. சீனாவின் மிரட்டலை மீறி தைவானுக்கு ஆயுதங்களை விற்பனை செய்யும் அமெரிக்கா
சீனாவின் மிரட்டலை மீறி அமெரிக்கா 2.4 பில்லியன் டாலர் கடலோர பாதுகாப்பு அமைப்புகளை தைவானுக்கு விற்பனை செய்வதாக அமெரிக்கா அறிவித்துள்ளது.
4. சீனாவுடன் ராணுவக் கூட்டணி வைக்க தற்போதைய நிலையில் தேவையில்லை ரஷிய அதிபர் புதின்
சீனா மற்றும் ரஷியா இடையே ராணுவ ரீதியிலான உறவு உள்ளது, இதே நிலை நீடித்தால் எதிர்காலத்தில் கூட்டணி ஏற்படுவதற்கான சாத்தியம் அதிகம் இருப்பதாக ரஷிய அதிபர் புதின் அறிவித்துள்ளார்.
5. சீனாவின் உத்தரவின் பேரில் பூட்டான் பிரதமரிடம் பேசிய இம்ரான்...!!
சீனாவின் திட்டங்களை நிறைவேற்ற பூட்டானுடன் நெருக்காமாக இருக்க பாகிஸ்தான் முயற்சிக்கிறது.