உலக செய்திகள்

பாகிஸ்தான் ராணுவமும், ஐஎஸ்ஐயும் இம்ரான்கானை கொண்டு பொம்மை ஆட்சி நடத்துகின்றன - நவாஸ் செரீப் + "||" + Nawaz Sharif accuses Pakistan’s army chief of toppling his government

பாகிஸ்தான் ராணுவமும், ஐஎஸ்ஐயும் இம்ரான்கானை கொண்டு பொம்மை ஆட்சி நடத்துகின்றன - நவாஸ் செரீப்

பாகிஸ்தான் ராணுவமும், ஐஎஸ்ஐயும் இம்ரான்கானை கொண்டு பொம்மை ஆட்சி நடத்துகின்றன - நவாஸ் செரீப்
பாகிஸ்தான் ராணுவமும், ஐஎஸ்ஐ அமைப்பும் சேர்ந்து தகுதி இல்லாத இம்ரான்கானை கொண்டு பொம்மை ஆட்சி நடத்துகின்றன என முன்னாள் பிரதமர் நவாஸ் ஷெரீப் குற்றம்சாட்டினார்.
இஸ்லாமாபாத்

பல்வேறு ஊழல் குற்றச்சாட்டில் சிக்கி சிறையில் இருந்த முன்னாள் பிரதமர் நவாஸ் செரீப் தற்போது ஜாமீனில் வெளிவந்துள்ளார். சிகிச்சைக்காக லண்டனுக்கு நவாஸ் ஷெரீப் சென்றுள்ளார்.

பாகிஸ்தான் நாட்டின் 11 எதிர்க்கட்சிகளை உள்ளடக்கிய கூட்டணியான பாகிஸ்தான் ஜனநாயக இயக்கம் (பி.டி.எம்) பிரதமர் இம்ரான் கான் தலைமையிலான  அரசாங்கத்திற்கு எதிராக முதல் பிரச்சார கூட்டத்த நடத்தி உள்ளது.

முதல் அரசாங்க எதிர்ப்பு பேரணி லாகூரிலிருந்து 80 கி.மீ தூரத்தில் உள்ள குஜ்ரான்வாலா நகரில் வெள்ளிக்கிழமை நடைபெற்றது. 

இந்த கூட்டத்தில் பிடிஎம் அமைப்பின் தலைவர் மவுலானா பஸ்லூர் ரெஹ்மான், பிபிபி கட்சியின் தலைவர் பிலாவல் பூட்டோ ஜர்தாரி, நவாஸ் செரீப் மகள் மரியம் நவாஸ் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

இந்த நிகழ்ச்சியில் காணொலி மூலம் பங்கேற்ற நவாஸ் செரீப் அதில் பேசியதாவது:

ராணுவத் தளபதி ஜெனரல் குவாமர் ஜாவித் பஜ்வாதான் என்னுடைய ஆட்சியை முடிவுக்கு கொண்டுவந்தார். 2018-ம் ஆண்டு தேர்தலில் இந்த தேசத்துக்கு தகுதியில்லாத இம்ரான் கானை ஆட்சியில் ராணுவம் அமரவைத்தது. நாடு மோசமாக சீரழிந்ததற்கு நேரடியான குற்றவாளியான ஜெனரல் பஜ்வா இதற்கு பதில் அளிக்க வேண்டும்.

பாகிஸ்தான் மக்கள் இன்று சந்திக்கும் துயரங்கள், வேதனைகளுக்கு ஜெனரல் பஜ்வாதான் பொறுப்பேற்க வேண்டும். என்னுடைய ஆட்சியை கவிழ்த்ததற்கு பாகிஸ்தானின் உளவு அமைப்பான ஐஎஸ்ஐ அமைப்பும், ஐஎஸ்ஐ தலைவர் ஜெனரல் பியாஸ் ஹமீதுவும் காரணம். என்னுடைய ஆட்சியை கவிழ்த்தற்கு ஹமீதும் பதில் அளிக்க வேண்டும்.

என்னை நீங்கள் துரோகி என்று குற்றம்சாட்டலாம், என் சொத்துக்களை பறிமுதல் செய்யலாம், பொய்யான வழக்குகளை பதிவு செய்யலாம். ஆனால், தொடர்ந்து நான் என் மக்களின் நலனுக்காகப் பேசுவேன். இம்ரான் கானின் பெயரைக் கூற ஒருபோதும் அஞ்சமாட்டேன். என்னையும், என் குடும்பத்தாரையும் துரோகிகள் என்று இம்ரான் தரப்பு அழைக்கிறது. இது ஒன்றும் புதிதல்ல. தகுதியில்லாதவர்கள் ஆட்சியில் இருக்கிறார்கள்.

பாகிஸ்தானில் ராணுவமும், ஐஎஸ்ஐ அமைப்பும்தான் ஆட்சி நடத்துகின்றன. ராணுவமும், ஐஎஸ்ஐ அமைப்பும் சேர்ந்து இம்ரான்கானை கொண்டு பொம்மை ஆட்சி நடத்துகின்றன. அரசியலமைப்புச் சட்டத்தை மீறியவர்கள் ஏன் தண்டிக்கப்படவில்லை?

ஜனநாயகரீதியாக தேர்ந்தெடுக்கப்பட்ட என் அரசு ஏன் நீடிக்கவில்லை. பாகிஸ்தானில் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசுக்கும் மேலாக ஓர் அரசு செயல்படுகிறது. அதுதான் ராணுவம், ஐஎஸ்ஐ. இரு அரசுகள் நிர்வாகத்தில் இருந்தால் யார் பொறுப்பேற்பது? இவ்வாறு நவாஸ் ஷெரீப் பேசினார்.

தொடர்ந்து அக்டோபர் 18 அன்று கராச்சியில், அக்டோபர் 25 ஆம் தேதி குவெட்டாவில், நவம்பர் 22 அன்று பெஷாவர், நவம்பர் 30 அன்று முல்தான், பின்னர் ஒரு பேரணி டிசம்பர் 13 அன்று லாகூரில் நடைபெறும்.

தொடர்புடைய செய்திகள்

1. இந்தியா தாக்குதல் நடத்தும் என கேட்டதும் கால்கள் நடுங்கிய பாகிஸ்தான் ராணுவத் தளபதி - பாகிஸ்தான் எம்பி கிண்டல்
அபிநந்தனை விடுவித்திருக்கா விட்டால் பாகிஸ்தான் இந்தியா மீது தாக்குதல் நடத்தி இருக்கும். இதை கேட்டதும் ராணுவத் தளபதி பாஜ்வாவின் கால்கள் நடுங்கின என பாகிஸ்தான் எம்பி கூறி உள்ளார்.
2. இந்தியாவுக்கு சவுதி அரேபியா தீபாவளி பரிசு: கில்கிட்-பலுசிஸ்தான் -காஷ்மீரை பாகிஸ்தானின் வரைபடத்திலிருந்து நீக்கியது
இந்தியாவுக்கு சவுதி அரேபியாவின் தீபாவளி பரிசு - கில்கிட்-பலுசிஸ்தான் மற்றும் காஷ்மீரை பாகிஸ்தானின் வரைபடத்திலிருந்து நீக்கி உள்ளது.
3. இந்தியாவுக்கு வெங்காயம் ஏற்றுமதி செய்வதில் பாகிஸ்தான் இடையூறு-ஆப்கானிஸ்தான் எதிர்ப்பு
இந்தியா செல்ல சரக்குகளை ஏற்றி வரும் வாகனங்களை சோதனை செய்வதில் பாகிஸ்தான் அதிகாரிகள் காலம் தாழ்த்துவதாக ஆப்கானிஸ்தான் குற்றம் சாட்டியுள்ளது.
4. பாகிஸ்தானில் குண்டுவெடிப்பு: 7 பேர் பலி
பாகிஸ்தானில் நடந்த குண்டுவெடிப்பில் 7 பேர் பலியாகியுள்ளனர்.
5. ஜம்மு காஷ்மீர்: பாகிஸ்தான் டிரோனை சுட்டு வீழ்த்தியது இந்திய ராணுவம்
இந்திய எல்லைக்குள் பறந்த பாகிஸ்தான் ராணுவத்தின் குவாட்காப்டர் எனப்படும் டிரோனை இந்திய ராணுவம் சுட்டு வீழ்த்தியது.