உலக செய்திகள்

பிரான்ஸில் தலை துண்டாக்கப்பட்டு கொலை செய்யப்பட்ட ஆசிரியர் இவர் தான்! + "||" + Suspect in teacher's beheading in France was Chechen teen

பிரான்ஸில் தலை துண்டாக்கப்பட்டு கொலை செய்யப்பட்ட ஆசிரியர் இவர் தான்!

பிரான்ஸில் தலை துண்டாக்கப்பட்டு கொலை செய்யப்பட்ட ஆசிரியர் இவர் தான்!
பிரான்ஸில் தலை துண்டாக்கப்பட்டு கொலை செய்யப்பட்ட ஆசிரியர் இவர் தான்! வெளியான புகைப்படம் மற்றும் முழு விபரம்
பாரீஸ்

பிரான்ஸ் தலைநகர் பாரீஸ் அருகில் உள்ள பள்ளியில் வரலாற்று ஆசிரியர் ஒருவர் முகமது நபியின் கேலிசித்தி பாடம் எடுத்துக்கொண்டிருந்தார். அப்போது திடீரென துப்பாக்கி மற்றும் ஆயுதங்களுடன் வகுப்பு அறையில் புகுந்த மர்மநபர் பாடம் நடத்திக்கொண்டிருந்த ஆசிரியரின் தலையை துண்டித்தார். இதனால் மாணவ-மாணவிகள் அதிர்ச்சி அடைந்தனர். இது குறித்து சம்பவ இடத்திற்கு விரைந்த போலீசார் மர்மநபரை சுட்டுக்கொன்றனர். 

இந்த தாக்குதல் குறித்து அந்நாட்டு அதிபர் மக்ரோன் லெபனான்,  இது ஒரு பயங்கரவாத தாக்குதல் என கண்டனம் தெரிவித்தார். மேலும் பயங்கரவாத்திற்கு எதிராக ஒட்டு மொத்த மக்களும் துணை நிற்க வேண்டும் என்று வலியுறுத்தினார். இந்த சம்பவம் குறித்து விசாரணைக்கு உத்தரவிட்டுள்ளார்.

தீவிரவாதி என்று சந்தேகிக்கப்படும் நபரால் கொல்லப்பட்ட ஆசிரியர் 47 வயதான சாமுவேல் பாட்டி என தெரியவந்துள்ளது. 

போலீசாரால் கொல்லப்பட்ட அந்த தீவிரவாதி, 18 வயதேயான மாஸ்கோவில் பிறந்த செச்சென் இளைஞர் என தகவல் வெளியாகியுள்ளது. அவரது பெயர் அப்துல்லா.

ஆசிரியர் சாமுவேல் கொலை தொடர்பாக முஹம்மது நபியின் கார்ட்டூன்களை காட்டியதற்காக எதிர்ப்பு தெரிவித்த இரண்டு பெற்றோர்கள் உட்பட 9 பேரை போலீசார் கைது செய்துள்ளனர்.

தொடர்புடைய செய்திகள்

1. இஸ்லாமிய நாடுகளில் வசிக்கும் தங்கள் நாட்டு மக்கள் எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும்- பிரான்ஸ் அறிவுறுத்தல்
இஸ்லாமிய நாடுகளில் வசிக்கும் தங்கள் நாட்டு மக்கள் எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும் என பிரான்ஸ் அறிவுறுத்தியுள்ளது.
2. பிரான்சில் கொரோனா பரவலை தடுக்க இன்று முதல் இரவு நேர ஊரடங்கு அமல்
பிரான்சில் பாரீஸ் உள்ளிட்ட நகரங்களில் கொரோனா பரவலை தடுக்க இன்று முதல் இரவு நேர ஊரடங்கு அமல்படுத்தப்படுகிறது.
3. பிரான்ஸில் சிறிய ரக விமானங்கள் நேருக்கு நேர் மோதி விபத்து: 5 பேர் பலி
பிரான்ஸில் சிறிய ரக விமானங்கள் நேருக்கு நேர் மோதிய விபத்தில் சிக்கி 5 பேர் பலியாகினர்.
4. பிரான்ஸ், இத்தாலியை புரட்டி போட்ட ‘அலெக்ஸ்’ புயல்
பிரான்ஸ், இத்தாலி ஆகிய இரு நாடுகளும் ‘அலெக்ஸ்’ புயலால் பெரும் பாதிப்பை சந்தித்துள்ளன.
5. உச்சம் தொட்ட கொரோனா பாதிப்பு: சிவப்பு மண்டலமாக அறிவித்த ஐரோப்பிய நாடு
திடீரென்று ஒரே நாளில் உச்சம் தொட்ட கொரோனா பாதிப்பு! பாரிஸை சிவப்பு மண்டலமாக அறிவித்த ஐரோப்பிய நாடு