உலக செய்திகள்

நியூசிலாந்து பொதுத்தேர்தல்: பிரதமர் ஜெசிந்தா ஆர்டென் இரண்டாவது முறை வெற்றி + "||" + New Zealand PM Jacinda Ardern wins second term in landslide election victory

நியூசிலாந்து பொதுத்தேர்தல்: பிரதமர் ஜெசிந்தா ஆர்டென் இரண்டாவது முறை வெற்றி

நியூசிலாந்து பொதுத்தேர்தல்: பிரதமர் ஜெசிந்தா ஆர்டென் இரண்டாவது முறை வெற்றி
நியூசிலாந்து பொதுத்தேர்தலில் பிரதமர் ஜெசிந்தா ஆர்டென் இரண்டாவது முறை வெற்றி பெற்று உள்ளார்.
வெலிங்டன்

நியூசிலாந்து பொதுத் தேர்தலில் ஆளும் கட்சியான ஜெசிந்தா ஆர்டெனின் தொழிலாளர் கட்சி 49.2 சதவீத வாக்குகளைப் பெற்றுள்ளது. மேலும், நாடாளுமன்றத்தில் மொத்தமுள்ள 120 இடங்களில் 64 இடங்களை ஆளும் கட்சி கைப்பற்றியுள்ளது. இதன் மூலம் நியூசிலாந்து தேர்தலில் ஜெசிந்தா ஆர்டென் மகத்தான வெற்றியைப் பெற்றுள்ளார்.

இந்த வெற்றியின் மூலம் நியூசிலாந்தின் பிரதமராக ஜெசிந்தா ஆர்டென் இரண்டாவது முறையாகப் பதவி ஏற்க உள்ளார்.

வெற்றி குறித்து ஜெசிந்தா கூறும்போது, அடுத்த மூன்று ஆண்டுகளில் நிறைய பணிகள் உள்ளன. கொரோனா நெருக்கடியிலிருந்து நாட்டைச் சிறப்பாகக் கட்டமைப்போம் என கூறி உள்ளார்.

தேர்தலில் வெற்றி பெற்ற ஜெசிந்தாவுக்குப் பல்வேறு தலைவர்கள் வாழ்த்துகளைத் தெரிவித்து வருகின்றனர்.