உலக செய்திகள்

டிரம்ப் காலத்தில் வெள்ளை மாளிகையில் பணியாற்றுவது என்பது பரிதாபகரமான செயல்- முன்னாள் அதிகாரி + "||" + Former White House chief of staff tells friends that Trump 'is the most flawed person' he's ever met

டிரம்ப் காலத்தில் வெள்ளை மாளிகையில் பணியாற்றுவது என்பது பரிதாபகரமான செயல்- முன்னாள் அதிகாரி

டிரம்ப் காலத்தில் வெள்ளை மாளிகையில் பணியாற்றுவது என்பது பரிதாபகரமான செயல்- முன்னாள் அதிகாரி
டிரம்ப் காலத்தில் வெள்ளை மாளிகையில் பணியாற்றுவது என்பது பரிதாபகரமான செயல் என முன்னாள் அதிகாரி ஜான் கெல்லி க்கூறி உள்ளார்.
வாஷிங்டன்

வெள்ளை மாளிகையின் முன்னாள் அதிகாரி ஓய்வு பெற்ற ஜெனரல் ஜான் கெல்லி, ஜனாதிபதி டிரம்ப் குறித்து வெளியிட்டுள்ள கருத்துகள் தற்போது தேர்தல் களத்தில் சூட்டைக் கிளப்பியுள்ளது.

செய்தி ஊடகம் ஒன்றிற்கு சிறப்பு பேட்டி அளித்த வெள்ளை மாளிகையின் முன்னாள் அதிகாரி ஜெனரல் ஜான் கெல்லி, தனது வாழ்நாளில் ஜனாதிபதி டிரம்ப் போன்று ஒழுக்கமற்ற ஒரு நபரை சந்தித்ததில்லை என குறிப்பிட்டுள்ளார்.

ஜனாதிபதி டிரம்பின் தேசிய பாதுகாப்பு ஆலோசகராக பணியாற்றி வந்த ஜெனரல் ஜான் கெல்லி, பின்னர் வெள்ளை மாளிகையின் முதன்மை அதிகாரிகளில் ஒருவராக நியமிக்கப்பட்டார்.ஆனால், ஜனாதிபதி டிரம்புடன் ஏற்பட்ட கருத்துவேறுபாடு காரணமாக 2018 டிசம்பர் மாதம் ஜெனரல் ஜான் கெல்லி பதவியில் இருந்து நீக்கப்பட்டார்.

டிரம்புடன் வெள்ளை மாளிகையில் பணியாற்றுவது என்பது பரிதாபகரமான செயல் என குறிப்பிட்டிருந்தார் ஜான் கெல்லி. டிரம்ப் குறித்து பேசிய ஜான் கெல்லி, அவரது நேர்மையின்மையின் ஆழம் என்னை வியக்க வைத்திருக்கிறது என்றார்.

மட்டுமின்றி, டிரம்பின் ஒழுக்கமற்ற செயற்பாடு, ஆட்சியில், அவர் மேற்கொள்ளும் முடிவுகளில் பிரதிபலிப்பதாகவும் ஜெனரல் ஜான் கெல்லி சுட்டிக்காட்டியுள்ளார்.


தொடர்புடைய செய்திகள்

1. டொனால்டு டிரம்ப் சீனா வங்கியில் கணக்கு வைத்துள்ளார்- நியூயார்க் டைம்ஸ்
டொனால்டு டிரம்ப் சீனா வங்கியில் கணக்கு உள்ளது என்பதை நியூயார்க் டைம்ஸ் வெளியிட்டு உள்ளது.
2. சீனாவுக்கு ஆதரவான பிடன் இந்தியாவுக்கு எதிரானவர்- டொனால்டு டிரம்பின் மகன் குற்றச்சாட்டு
ஜோ பிடன் சீனாவுக்கு ஆதரவாக செயல்படுவார் என்பதால், இந்தியாவுக்கு எதிரானவர் என அமெரிக்க ஜனாதிபதியின் டொனால்டு டிரம்பின் மகன் விமர்சித்துள்ளார்.
3. வெள்ளை மாளிகை வந்ததும் மாஸ்க் அணிவதை தவிர்த்த டிரம்ப் !
கொரோனா தொற்றைக் கண்டு யாரும் அச்சப்பட வேண்டாம் என அமெரிக்க அதிபர் டிரம்ப் கூறினார்.
4. அமெரிக்க அதிபரின் ஆலோசகருக்கு கொரோனா பாதிப்பு
அமெரிக்க அதிபர் டிரம்பின் ஆலோசகருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது.
5. டொனால்ட் டிரம்ப் தனது நீண்டகால நண்பரும் ஆலோசகருமான ரோஜர் ஸ்டோனின் தண்டனையை குறைத்தார்
டொனால்ட் டிரம்ப் தனது நீண்டகால நண்பரும் ஆலோசகருமான ரோஜர் ஸ்டோனின் தண்டனையை குறைத்து உள்ளார்.