உலகளவில் கொரோனாவில் இருந்து குணமடைந்தோர் எண்ணிக்கை 3 கோடியை நெருங்கிறது


உலகளவில் கொரோனாவில் இருந்து குணமடைந்தோர் எண்ணிக்கை 3 கோடியை நெருங்கிறது
x
தினத்தந்தி 18 Oct 2020 1:43 AM GMT (Updated: 18 Oct 2020 1:43 AM GMT)

உலகளவில் கொரோனாவில் இருந்து குணமடைந்தோர் எண்ணிக்கை 3 கோடியை நெருங்கிறது.

வாஷிங்டன்,

சீனாவின் உகான் நகரில் கடந்த ஆண்டு இறுதியில் அங்கொன்றும், இங்கொன்றுமாக மக்கள் காய்ச்சல், இருமல், சோர்வு உள்ளிட்ட உபாதைகளால் பாதிக்கப்பட்டபோது, உலக நாடுளை முடக்கப்போகும் வைரஸ் ஒன்று தோன்றியிருப்பதாக யாரும் நினைக்கவில்லை.

ஆனால் அந்த வைரசுக்கு கொரோனா என பெயர் சூட்டி தடுப்பு நடவடிக்கைகளை தொடங்குவதற்குள் உகான் நகரம் முழுவதும் அதன் பிடிக்குள் சிக்கிக்கொண்டது. வைரஸ் தாக்கிய பலரும் மரண தேவதையின் கைகளில் ஐக்கியமாக நேர்ந்தது.

உகானை சின்னாபின்னமாக்கிய கொரோனா பிற நகரங்களுக்கும், மாகாணங்களுக்கும் இரண்டொரு வாரத்தில் பரவியபோது சீனா மட்டுமின்றி உலக நாடுகளும் மிரட்சியடையவே செய்தன. பின்னர் அது சீனா முழுவதும் பரவி, அங்கிருந்து அண்டை நாடுகள், தொலைதூர பிரதேசங்கள் என தனது கொடூர கரத்தை விரித்தபோது ஒட்டுமொத்த உலகமும் அதிர்ச்சியில் ஆழ்ந்தது.

3 மாதங்களுக்குள் அகில உலகிலும் தனது கொடூர கரங்களை பரப்பிய கொரோனாவை தடுக்க மருந்துகளோ, தடுப்பூசியோ கிடைக்காததுதான் பெரும் சோகமாகி விட்டது. எனவே அதற்கான மருந்துகளை உருவாக்குவதற்காக உலக நாடுகளின் ஆய்வகங்கள் இரவு-பகலாக மருந்து ஆராய்ச்சியில் மூழ்கின.

அதற்குள் அனைத்து நாடுகளிலும் கொரோனா மரணங்களும், மரண ஓலங்களும் அதிகரித்து உலகின் இயக்கத்தையே ஸ்தம்பிக்கச் செய்து விட்டது. கொரோனாவில் இருந்து மக்களை காத்துக்கொள்வதற்காக பெரும்பாலான நாடுகளும் கடந்த மார்ச் மாதம் முதல் ஊரடங்கு என்னும் பொது முடக்கத்தை அமல்படுத்தி விட்டன.

தோன்றிய 10 மாதங்களுக்குள் 4 கோடியை நெருங்கும் நோயாளிகளையும், 11 லட்சத்துக்கு மேற்பட்ட மரணங்களையும் பரிசளித்து இருக்கிற கொரோனா வைரஸ், இந்த நூற்றாண்டின் மிகப்பெரிய எதிரியாக மனித குலத்துக்கு உருவெடுத்து இருக்கிறது.

உலகையே அடக்கி வைத்திருக்கும் கண்ணுக்குத்தெரியாத அந்த வைரசை கொல்வதற்கு இன்னும் மருந்துகளும் கைவரப்பெறவில்லை. இதனால் அரசுகளால் பொது முடக்கத்தை நீக்கிடவும் முடியவில்லை. அங்கொன்றும், இங்கொன்றுமாக ஒருசில கட்டுப்பாடுகளை மட்டுமே விலக்கி மக்களின் சுமுக இயக்கத்தை கட்டுப்படுத்தியே வைத்திருக்கின்றன அரசுகள்.

இந்நிலையில் உலகளவில் 3.99 கோடி பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது. அதில் 2.98 கோடி பேர் குணமடைந்தனர். உலகளவில் கொரோனாவிற்கு 11.14 லட்சம் பேர் உயிரிழந்துள்ளனர். 

Next Story