சீனாவுக்கு ஆதரவான பிடன் இந்தியாவுக்கு எதிரானவர்- டொனால்டு டிரம்பின் மகன் குற்றச்சாட்டு


சீனாவுக்கு ஆதரவான பிடன்  இந்தியாவுக்கு எதிரானவர்-   டொனால்டு டிரம்பின் மகன் குற்றச்சாட்டு
x
தினத்தந்தி 19 Oct 2020 12:33 PM IST (Updated: 19 Oct 2020 12:33 PM IST)
t-max-icont-min-icon

ஜோ பிடன் சீனாவுக்கு ஆதரவாக செயல்படுவார் என்பதால், இந்தியாவுக்கு எதிரானவர் என அமெரிக்க ஜனாதிபதியின் டொனால்டு டிரம்பின் மகன் விமர்சித்துள்ளார்.

வாஷிங்டன்

ஜனநாயகக் கட்சி வேட்பாளர் ஜோ பிடன் மற்றும் அவரது குடும்பத்தினர் மீதான ஊழல் குற்றச்சாட்டுகள் குறித்து டொனால்ட் டிரம்ப் ஜூனியர் எழுதிய புத்தகத்தின் வெற்றி விழா நிகழ்ச்சி நியூயார்க்கில் லாங் தீவில்  நடைபெற்றது.

அதில் உரையாற்றும் போது, ஜோ பிடனின் மகனும் தொழிலதிபருமான ஹண்டர் பிடனுக்கு இந்திய மதிப்பில் 11 ஆயிரம் கோடி ரூபாயை கொடுத்து, அவரது குடும்பத்தை விலைக்கு வாங்கி தங்களுக்கு ஆதரவாளராக மாற்ற சீனா முயற்சிக்கிறது. னாவின் அச்சுறுத்தலை நாம் புரிந்து கொள்ள வேண்டும் என டொனால்டு டிரம்ப் ஜூனியர் குற்றஞ்சாட்டினார். 


Next Story