கொரோனா அச்சுறுத்தல்: அயர்லாந்தில் மீண்டும் லாக்டவுன் அறிவிப்பு


கொரோனா அச்சுறுத்தல்: அயர்லாந்தில் மீண்டும் லாக்டவுன் அறிவிப்பு
x
தினத்தந்தி 19 Oct 2020 11:31 PM GMT (Updated: 19 Oct 2020 11:31 PM GMT)

அயர்லாந்தில் புதிதாக 1031 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. அந்நாட்டில் இதுவரை கொரோனா பாதித்தவர்கள் எண்ணிக்கை 50 ஆயிரத்தை தாண்டியுள்ளது.

டப்ளின்,

ஐரோப்பிய நாடுகளில் கொரோனா வைரசின் 2-வது அலை தாக்கத்தொடங்கியுள்ளது. இதனால், பல்வேறு நாடுகள் மீண்டும் கட்டுப்பாடுகளை கொண்டு வருவது பற்றி பரிசீலித்து வருகின்றன. அந்த வகையில், திங்கள் கிழமை நாட்டு மக்களுக்கு உரையாற்றிய அயர்லாந்து பிரதமர் மைக்கேல் மார்ட்டின், வரும் புதன் கிழமை முதல் அயர்லாந்தில் 6 வாரங்களுக்கு கடுமையான ஊரடங்கு கட்டுப்பாடுகள் அமல்படுத்தப்படும் என்றார். 

மேலும், கொரோனா கட்டுப்பாடுகளை மதித்து செயல்பட்டால் வரும் கிறிஸ்துமஸ் பண்டிகையை சிறப்பாக கொண்டாட முடியும் எனவும் மக்களை கேட்டுக்கொண்டார். தொடர்ந்து பேசிய  மைக்கேல் மார்ட்டின், ‘ கொரோனாவின்  அச்சுறுத்தலை தீவிரமாக எடுத்துக்கொள்ள வேண்டும்.  "மந்தை நோய் எதிர்ப்பு சக்தி" அணுகுமுறை சாத்தியமில்லாதது.  அடுத்த ஆறு வாரங்களுக்கு நாம்  ஒன்றிணைந்து சிறப்பாக செயல்பட்டால் கிறிஸ்துமஸ் பண்டிகையை  சிறப்பாக கொண்டாட முடியும்.  எனினும், கடந்த காலங்களில் இருந்த கொண்டாட்டங்களை போல நடப்பு ஆண்டு கிறிஸ்துமஸ் இருக்காது’ என்றார். 

ஊரடங்கில் சில விதிவிலக்குகள் இருக்கும் எனவும் அயர்லாந்து அரசு அறிவித்துள்ளது. அத்தியாவசியமற்ற கடைகள் மூட வற்புறுத்தப்படும் என்றாலும், பார்கள் மற்றும் உணவு விடுதிகளில்  டேக் அவே முறையில் செயல்பட அனுமதி கொடுக்கப்படும். 5 கி.மீட்டர் தொலைவுக்கு மேல் மக்கள் பயணிக்க அனுமதி கிடையாது எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. தற்போதைய ஆறு வார அறிவிப்பின் படி டிசம்பர் 1 ஆம் தேதி வரை ஊரடங்கு கட்டுப்பாடுகள் இருக்கும். 

அயர்லாந்தில் புதிதாக 1031 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. அந்நாட்டில் இதுவரை கொரோனா பாதித்தவர்கள் எண்ணிக்கை 50 ஆயிரத்தை தாண்டியுள்ளது. 

Next Story