உலக செய்திகள்

மெலனியா டிரம்புக்கு ’தொடர் இருமல்’ பிரசாரத்தை ரத்து செய்தார் + "||" + Melania Trump Cancels Rare Campaign Appearance Due To "Lingering Cough"

மெலனியா டிரம்புக்கு ’தொடர் இருமல்’ பிரசாரத்தை ரத்து செய்தார்

மெலனியா டிரம்புக்கு ’தொடர் இருமல்’ பிரசாரத்தை ரத்து செய்தார்
அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்பின் மனைவி மெலனியா டிரம்ப் “தொடர் இருமல்” காரணமாக அதிபர் தேர்தலுக்கான தனது பிரசாரத்தை ரத்து செய்துள்ளார்.
வாஷிங்டன்,

அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்பின் மனைவி மெலனியா டிரம்ப் “தொடர் இருமல்” காரணமாக அதிபர் தேர்தலுக்கான தனது பிரசாரத்தை ரத்து செய்துள்ளார். பென்சில்வேனியாவில் உள்ள எரே பகுதியில் டிரம்புடன் இணைந்து மெலனியா டிரம்ப் பிரசார பொதுக்கூட்டத்தில் கலந்து கொள்ள திட்டமிட்டு இருந்தார்.

நடப்பு அதிபர் தேர்தலுக்கான பிரசாரத்தில், கணவரும் அமெரிக்க அதிபருமான டிரம்புடன் முதல் முறையாக  ஒரே மேடையில்  பங்கேற்று பிரசாரத்தில் ஈடுபட திட்டமிட்டு  இருந்த நிலையில்,  தனது பிரசாரத்தை மெலனியா டிரம்ப் ரத்து செய்துள்ளார்.  

இது குறித்து மெலனியா டிரம்பின் செய்தி தொடர்பாளர் கூறுகையில், “ கொரோனா தொற்று பாதிப்பில் இருந்து குணம் அடைந்த மெலனியா டிரம்ப்,   ஒவ்வொரு நாளும் தொடர்ந்து நன்றாக உணர்கிறார்.  ஆனால், தொடர் இருமல் காரணமாக மிகுந்த எச்சரிக்கையுடன் இன்று பயணத்தை ரத்து செய்துள்ளார்” என தெரிவித்தார். 

அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் மற்றும்  முதல் பெண்மனி மெலனியா டிரம்ப் , டிரம்பின் இளைய மகன் பாரன் டிரம்ப் ஆகியோர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு உடல் நலம் தேறியுள்ளது நினைவுகூரத்தக்கது. 

தொடர்புடைய செய்திகள்

1. அமெரிக்காவில் கொரோனா பாதிப்பால் கடந்த 24 மணி நேரத்தில் 2,000 பேர் பலி
அமெரிக்காவில் கொரோனா பாதிப்பால் கடந்த 24 மணி நேரத்தில் 2,000 பேர் பலியாகி உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
2. அமெரிக்காவில் 1.30 கோடியை நெருங்கி வரும் கொரோனா பாதிப்பு
அமெரிக்காவில் இதுவரை கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 1 கோடியே 27 லட்சத்தைக் கடந்துள்ளது.
3. அமெரிக்காவில் பயங்கரம்; தேவாலயத்துக்குள் புகுந்து கத்தி குத்து; 2 பேர் பலி
அமெரிக்காவில் தேவாலயத்துக்குள் புகுந்து கத்தியால் குத்தி தாக்குதல் நடத்தியதில் இரண்டு பேர் பரிதாபமாக உயிரிழந்தனர்.
4. அமெரிக்காவில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 12 மில்லியனை தாண்டியது
அமெரிக்காவில் கொரோனா வைரஸ் பாதித்தவர்கள் எண்ணிக்கை 1 கோடியே 20 லட்சத்தை தாண்டியுள்ளது.
5. அமெரிக்க அதிபர் டிரம்பின் மூத்த மகனுக்கு கொரோனா தொற்று
அமெரிக்க அதிபர் டிரம்பின் மூத்த மகன் டொனால்டு டிரம்ப் ஜூனியர் கொரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளார்.