உலக அளவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 4.10 கோடியாக உயர்வு


உலக அளவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 4.10 கோடியாக உயர்வு
x
தினத்தந்தி 21 Oct 2020 12:55 AM GMT (Updated: 21 Oct 2020 12:55 AM GMT)

உலக அளவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 4.10 கோடியாக உயர்ந்துள்ளது.

ஜெனீவா, 

சீனாவின் உகான் நகரில் கடந்த ஆண்டு இறுதியில் முதன் முதலில் வெளிப்பட்ட கொரோனா வைரஸ், உலக நாடுகளை உலுக்கி வருகிறது. கொரோனாவால் அதிக பாதிப்பு கொண்ட நாடுகளின் பட்டியலில் அமெரிக்காவுக்கு அடுத்தபடியாக 2-வது இடத்தில் தொடர்ந்து இந்தியா நீடிக்கிறது.

இந்நிலையில், தற்போதைய நிலவரப்படி, உலகம் முழுவதும் 4,10,22,119 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. கொரோனா பாதிப்பில் இருந்து இதுவரை 3,06,16,552 பேர் குணமடைந்துள்ளனர். மேலும் வைரஸ் தாக்குதலுக்கு இதுவரை 11 லட்சத்து 28 ஆயிரத்து 877 பேர் உயிரிழந்துள்ளனர்.

வைரஸ் பரவியவர்களில் 92 லட்சத்து 76 ஆயிரத்து 690 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். சிகிச்சை பெறுபவர்களில் 76 ஆயிரத்து 851 பேரின் நிலைமை கவலைக்கிடமாக உள்ளது. 

கொரோனா அதிகம் பரவிய நாடுகள்:-

அமெரிக்கா       -  பாதிப்பு - 85,19,467, உயிரிழப்பு - 2,26,120, குணமடைந்தோர் - 55,43,053
இந்தியா       -    பாதிப்பு - 76,49,158, உயிரிழப்பு - 1,15,950, குணமடைந்தோர் - 67,92,550
பிரேசில்       -    பாதிப்பு - 52,74,817, உயிரிழப்பு - 1,54,888, குணமடைந்தோர் - 47,21,593
ரஷியா        -    பாதிப்பு - 14,31,635, உயிரிழப்பு -   24,635, குணமடைந்தோர் - 10,85,608
ஸ்பெயின்    -     பாதிப்பு -  10,29,668, உயிரிழப்பு -  34,210.

Next Story