பாகிஸ்தான் கராச்சியில் நடந்த குண்டு வெடிப்பில் 5 பேர் பலி; 20 பேர் காயம்


பாகிஸ்தான் கராச்சியில் நடந்த குண்டு வெடிப்பில் 5 பேர் பலி; 20 பேர் காயம்
x
தினத்தந்தி 21 Oct 2020 6:58 AM GMT (Updated: 21 Oct 2020 6:58 AM GMT)

பாகிஸ்தான் கராச்சியில் நடந்த குண்டு வெடிப்பில் 5 பேர் பலியானார்கள்; 20 பேர் படுகாயமடைந்தனர்.

கராச்சி

பாகிஸ்தான் கராச்சியின் குல்ஷன்-இ-இக்பால் பகுதியில் இன்று காலை  மஸ்கன் சவ்ரங்உகி அருகே பயங்கர சத்தத்துடன் குண்டு வெடித்தது. இதில் 5 பேர் கொல்லப்பட்டனர் மற்றும் 20 பேர் காயமடைந்தனர்.

காயமடைந்த  அனைவரும் படேல் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டு அங்கு சிகிச்சைபெற்று வருகிறார்கள்.

குண்டுவெடிப்பின் தன்மை இன்னும் கண்டறியப்படவில்லை. எவ்வாறாயினும், இது சிலிண்டர் குண்டு வெடிப்பு என்று தெரிகிறது" என்று முபினா டவுன் போலீசார்  தெரிவித்து உள்ளனர். வெடிப்புக்கான காரணத்தை அறிய சமபவ இடத்திற்கு வெடிகுண்டு நிபுணர் குழு சென்றுள்ளது.

இந்த குண்டுவெடிப்பு ஒரு கட்டிடத்தின் இரண்டாவது மாடியில் நடந்ததாக கூறப்படுகிறது. அருகிலுள்ள கட்டிடங்களின் ஜன்னல்கள் மற்றும் சில வாகனங்களும் சேதமடைந்துள்ளதாக நேரில் பார்த்தவர்கள் தெரிவித்தனர்.

இந்த குண்டுவெடிப்பு ஒரு கட்டிடத்தின் இரண்டாவது மாடியில் நடந்ததாக சந்தேகிக்கப்படுகிறது. அருகிலுள்ள கட்டிடங்களின் ஜன்னல்கள் மற்றும் சில வாகனங்களும் சேதமடைந்துள்ளதாக நேரில் பார்த்தவர்கள் தெரிவித்தனர்.

ஒரு நாள் முன்னதாக, ஷெரின் ஜின்னா காலனி அருகே பஸ் நிறுத்த நுழைவாயிலில் வெடிகுண்டு வெடித்ததில் ஐந்து பேர் காயமடைந்தனர்.


Next Story