ஆப்கானிஸ்தானில் பாகிஸ்தான் தூதரகத்தில் ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி 15 பெண்கள் பலி + "||" + At least 15 Afghan women killed in stampede near Pakistan consulate in Jalalabad
ஆப்கானிஸ்தானில் பாகிஸ்தான் தூதரகத்தில் ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி 15 பெண்கள் பலி
ஆப்கானிஸ்தானில் பாகிஸ்தான் தூதரகத்தில் ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி 15 பெண்கள் பலியானார்கள்
காபூல்
ஆப்கானிஸ்தான் ஜலாலாபாத் பாகிஸ்தான் தூதரகத்தில் விசாக்களுக்கு விண்ணப்பிக்க இன்று டோக்கன் வழங்கப்பட்டது. இதற்காக அங்கு 3 ஆயிரத்துற்கு அதிகமானோர் திரண்டிருந்தனர். அப்போது ஏற்பட்ட கூட நெரிசலில் சிக்கி 15 ஆப்கானிஸ்தான் பெண்கள் பலியானதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
எட்டு பெண்கள் உட்பட 10 பேர் காயமடைந்தனர். கூட்டத்தில் நின்று இருந்த பல வயதானவ்ர்களும் காயமடைந்தனர் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன.
ஒவ்வொரு ஆண்டும் பல்லாயிரக்கணக்கான ஆப்கானிஸ்தானர்கள் மருத்துவ சிகிச்சை, கல்வி மற்றும் வேலைகளைப் பெறுவதற்காக அண்டை நாடான பாகிஸ்தானுக்குச் செல்கின்றனர். இரு நாடுகளும் கிட்டத்தட்ட 2,600 கிலோமீட்டர் எல்லையை பகிர்ந்து கொள்கின்றன.
போரினால் பாதிக்கப்பட்ட நாட்டில் வன்முறை, மத துன்புறுத்தல் மற்றும் வறுமையை விட்டு வெளியேறிய சுமார் 30 லட்சம் ஆப்கானஸ்தான அகதிகள் மற்றும் பொருளாதார குடியேறியவர்களை பாகிஸ்தான் கொண்டுள்ளது.
காபூலில் உள்ள பாகிஸ்தான் தூதரகத்தில் உள்ள அதிகாரிகள் உடனடியாக இது குறித்து கருத்து தெரிவிக்கவில்லை.