உலக செய்திகள்

வாஷிங்டனில் காணாமல் போன அமெரிக்க வாழ் இந்திய பேராசிரியர்: தேடும் பணி தீவிரம் + "||" + Search Underway For Missing Indian-American Professor

வாஷிங்டனில் காணாமல் போன அமெரிக்க வாழ் இந்திய பேராசிரியர்: தேடும் பணி தீவிரம்

வாஷிங்டனில் காணாமல் போன அமெரிக்க வாழ் இந்திய பேராசிரியர்: தேடும் பணி தீவிரம்
வாஷிங்டன் மாகாணத்தில் கடந்த 10 நாட்களுக்கும் மேலாக காணாமல் போன அமெரிக்க வாழ் இந்திய பேராசிரியரை தேடும் பணி நடைபெற்று வருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
வாஷிங்டன்,

சியாட்டிலின் வாஷிங்டன் பல்கலைக்கழகத்தின் பேராசிரியரான 33 வயதான சாம் துபல், மோவிச் ஏரி டிரெயில்ஹெட்டில் இருந்து மதர் மவுண்டன் லூப் பகுதிக்கு அக்டோபர் 9 ஆம் தேதி சென்றுள்ளார். இருப்பினும், அங்கிருந்து அக்டோபர் 12 ஆம் தேதி வெளியேறிய அவர் எங்கு சென்றார் என தெரியவில்லை என போலீசார் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதைத் தொடர்ந்து அவரைத் தேடும் பணிக்காக வாஷிங்டன் மாநில அவசரகால செயல்பாட்டு மையத்தின் பல குழுக்கள் அனுப்பப்பட்டுள்ளதாக போலீசார் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதனிடையே துபேலின் காரை தேடுதல் குழு கண்டுபிடித்துள்ளதாக துபேலின் சகோதரி வீணா தெரிவித்துள்ளார்.

 துபேலின் சகோதரி வீணா மேலும் கூறுகையில், 

என் சகோதரனைக் காணவில்லை. அவர் 9-ம் தேதி இரவு வாஷிங்டன் மாகாணத்தில் உள்ள இப்ஸூட் க்ரீக் மற்றும் சியாட்டில் பூங்காவில் முகாமிட்டு இருந்தார். 

அவர் சனிக்கிழமை (அக்டோபர் 10) வீட்டிற்கு திரும்ப இருந்தார். யாராவது நடைபயிற்சி மேற்கொண்டால் அல்லது அந்த இடத்தில் முகாமிட்டு இருந்தால் தயவுசெய்து கவனித்துக் கொள்ளுங்கள். இது குறித்து தகவலை அனுப்புங்கள் என கூறியுள்ளார்.

துபல் கடந்த ஜூன் மாதம் வாஷிங்டன் பல்கலைக்கழக மானுடவியல் துறையில் உதவி பேராசிரியராக சேர்ந்தது குறிப்பிடத்தக்கது.