சீனாவின் கொரோனா தடுப்பூசியை வாங்க மாட்டோம்- பிரேசில் அதிபர்


சீனாவின் கொரோனா தடுப்பூசியை வாங்க மாட்டோம்- பிரேசில் அதிபர்
x
தினத்தந்தி 21 Oct 2020 11:39 PM GMT (Updated: 21 Oct 2020 11:39 PM GMT)

சீனாவின் உகான் நகரில் தான் கொரோனா வைரஸ் முதன் முதலாக கடந்த ஆண்டு இறுதியில் வெளிப்பட்டது.

ரியோ டி ஜெனீரா,

கொரோனாவுக்கு எதிரான தடுப்பூசி விரைவில் கிடைத்துவிடும் என்ற நம்பிக்கை வலுப்பெற்றுள்ளது. இன்னும் சில மாதங்களில் இந்த தடுப்பூசிகள் பயன்பாட்டுக்கு வந்துவிடும் என உலக நாடுகள் எதிர்பார்த்து உள்ளன. உலக அளவில் இந்தியா, அமெரிக்கா, இங்கிலாந்து ஆகிய நாடுகளில் கொரோனா தடுப்பூசி பரிசோதனை மருத்துவ பரிசோதனையின் இறுதி கட்டத்தில் உள்ளன. 

வைரசை உலக நாடுகளுக்கு அடையாளம் காட்டிய சீனாவும் தடுப்பூசி கண்டுபிடிக்கும் பணியில் மும்முரமாக ஈடுபட்டுள்ளது. சீனாவின் சினோவேக் என்ற தடுப்பூசியும் இறுதி கட்டத்தில் உள்ளது. இந்த நிலையில், சீனாவின் கொரோனா தடுப்பூசியை வாங்கப் போவது இல்லை என்று பிரேசில் அதிபர் ஜெய்ர் போல்சனரோ அறிவித்துள்ளார். 

சமூக வலைத்தளத்தில் ஆதாரவாளர் ஒருவர் சீனாவின் தடுப்பூசியை வாங்க வேண்டாம் என வலியுறுத்திய பதிவுக்கு பதில் அளித்துள்ள பிரேசில் அதிபர், “ நிச்சயமாக சீனாவின் தடுப்பூசியை வாங்க மாட்டோம்” என்றார். 

Next Story