உலக செய்திகள்

நைஜீரியாவில் போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் மீது போலீஸ் துப்பாக்கிச்சூடு: 12 பேர் உயிரிழப்பு + "||" + End SARS: 'At least 12 killed by government forces' as anti-police brutality protests continue in Nigeria

நைஜீரியாவில் போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் மீது போலீஸ் துப்பாக்கிச்சூடு: 12 பேர் உயிரிழப்பு

நைஜீரியாவில் போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் மீது போலீஸ் துப்பாக்கிச்சூடு: 12 பேர் உயிரிழப்பு
நைஜீரியாவில் போலீசாரின் அத்துமீறல்களுக்கு எதிராக 2 வாரங்களுக்கும் மேலாக போராட்டம் நடைபெற்று வருகிறது.

லாகோஸ், 

ஆப்பிரிக்க நாடுகளில் ஒன்று நைஜீரியா. இந்த நாட்டில்  போலீஸ் பிரிவில் கொள்ளை தடுப்பு சிறப்பு பிரிவு ஒன்று உருவாக்கப்பட்டது. இந்த சிறப்பு பிரிவு போலீசார் அத்துமீறி நடந்து கொள்வதாகவும் சட்ட விரோத கைது நடவடிக்கைகளில் ஈடுபடுவதாகவும் நைஜீரிய மக்கள் மத்தியில் எதிர்ப்பு எழுந்தது. இதையடுத்து, புதிதாக உருவாக்கப்பட்ட கொள்ளை தடுப்பு பிரிவை கலைக்க வலியுறுத்தி கடந்த சில வாரங்களாக லாகோஸ் நகரில் பிரம்மாண்ட போராட்டம் நடைபெற்று வருகிறது. 

போராட்டங்களையடுத்து,  சிறப்பு படை பிரிவை கலைப்பதாக  அதிபர் முகம்மது புஹாரி அறிவித்தார். ஆனாலும், போராட்டத்தை கைவிட மறுத்த போராட்டக்காரர்கள் பாதுகாப்பு படை பிரிவில் மேலும் பல்வேறு மாற்றங்களை கொண்டு வர வேண்டும். நாட்டில் பல்வேறு சீர்திருத்தங்களை கொண்டு வர வேண்டும் என்ற புதிய கோரிக்கைகளை முன்வைத்து போராட்டத்தை தொடர்ந்தனர். இதற்கு மத்தியில் போராட்டத்தை கிரிமினல்கள் கட்டுக்குள் கொண்டு வந்துவிட்டதாக லாகோஸ்  ஆளுநர் குற்றம் சாட்டினார். 

இந்த நிலையில், போராட்டக்காரர்கள் மீது போலீசார் துப்பாக்கிச்சூடு நடத்தினர். இந்த துப்பாக்கிச்சூட்டில்  12 பேர் பலியாகியுள்ளனர். இந்த தகவலை அம்னெஷ்டி இண்டர்னேஷ்னல் அமைப்பு தெரிவித்துள்ளது. 

தொடர்புடைய செய்திகள்

1. நாகையில் போலீசாரை கண்டித்து பெண் தர்ணா போராட்டம்
நாகையில் போலீசாரை கண்டித்து பெண் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டார்.
2. நைஜீரியாவில் பயங்கரவாதிகள் வெறிச்செயல்; விவசாய தொழிலாளர்கள் 110 பேர் கொடூரமாக கொலை
நைஜீரியாவில் விவசாய பணியில் ஈடுபட்டுக்கொண்டிருந்த தொழிலாளர்கள் 110 பேரை போகோ ஹாரம் பயங்கரவாதிகள் கழுத்தறுத்து கொடூரமாக கொலை செய்துள்ளனர்.
3. போராட்டம் நடத்தும் விவசாயிகளுடன் மத்திய அரசு உடனே பேசவேண்டும்; கெஜ்ரிவால் வலியுறுத்தல்
போராட்டம் நடத்தும் விவசாயிகளுடன் மத்திய அரசு உடனே பேசவேண்டும் என்று கெஜ்ரிவால் வலியுறுத்தியுள்ளார்.
4. நைஜீரியாவில் விவசாயிகள் 40 பேர் கழுத்தை அறுத்து படுகொலை
நைஜீரியாவில் பயங்கரவாதிகளால் விவசாயிகள் 40 பேர் கழுத்தறுத்து படுகொலை செய்யப்பட்டனர்.
5. மத்திய அரசை கண்டித்து போராட்டம் தொழிற்சங்கத்தினர்-போலீசார் இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டதால் பரபரப்பு
கோவையில் மத்திய அரசை கண்டித்து நடந்த போராட்டத்தில் தொழிற்சங்கத்தினருக்கும், போலீசாருக்கும் இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டது. இதையடுத்து பி.ஆர்.நடராஜன் எம்.பி. உள்பட 500 பேர் கைது செய்யப்பட்டனர்.