உலக அளவில் கொரோனா பாதிப்பு அதிகரிப்பு: பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 4.14 கோடியாக உயர்வு + "||" + Worldwide increase in corona vulnerability: number of victims rises to 4.14 crore
உலக அளவில் கொரோனா பாதிப்பு அதிகரிப்பு: பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 4.14 கோடியாக உயர்வு
உலக அளவில் கொரோனா பாதிப்பில் இருந்து குணமடைந்தோர் எண்ணிக்கை 3.08 கோடியாக உயர்ந்துள்ளது.
ஜெனீவா,
சீனாவின் உகான் நகரில் கடந்த ஆண்டு இறுதியில் முதன் முதலில் வெளிப்பட்ட கொரோனா வைரஸ், உலக நாடுகளை உலுக்கி வருகிறது. கொரோனாவால் அதிக பாதிப்பு கொண்ட நாடுகளின் பட்டியலில் அமெரிக்கா முதலிடத்திலும், அடுத்தபடியாக 2-வது இடத்தில் தொடர்ந்து இந்தியாவும் நீடிக்கிறது.
இந்நிலையில், தற்போதைய நிலவரப்படி, உலகம் முழுவதும் 4,14,58,813 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. கொரோனா பாதிப்பில் இருந்து இதுவரை 3,08,52,155 பேர் குணமடைந்துள்ளனர். மேலும் வைரஸ் தாக்குதலுக்கு இதுவரை 11 லட்சத்து 35 ஆயிரத்து 636 பேர் உயிரிழந்துள்ளனர்.
வைரஸ் பரவியவர்களில் 94 லட்சத்து 71 ஆயிரத்து 022 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். சிகிச்சை பெறுபவர்களில் 74 ஆயிரத்து 078 பேரின் நிலைமை கவலைக்கிடமாக உள்ளது.
கொரோனா பாதிப்பு அதிகம் உள்ள நாடுகள்:-
அமெரிக்கா - பாதிப்பு - 85,81,599, உயிரிழப்பு - 2,27,348, குணமடைந்தோர் - 55,86,221
இந்தியா - பாதிப்பு - 77,05,158, உயிரிழப்பு - 1,16,653, குணமடைந்தோர் - 68,71,898
பிரேசில் - பாதிப்பு - 53,00,649, உயிரிழப்பு - 1,55,459, குணமடைந்தோர் - 47,21,593