உலக செய்திகள்

தடுப்பூசி தற்காலிகமானது... கொரோனாவை ஒழிக்க முடியாது -நிபுணர் கருத்து + "||" + ‘Very little chance that it’ll be eradicated’: Senior British scientist raises concern about coronavirus

தடுப்பூசி தற்காலிகமானது... கொரோனாவை ஒழிக்க முடியாது -நிபுணர் கருத்து

தடுப்பூசி தற்காலிகமானது... கொரோனாவை ஒழிக்க முடியாது -நிபுணர் கருத்து
கொரோனா தொற்று நிரந்தரமாக மனித சமூகத்தில் இருக்கும் என்றும், ஆனால் தடுப்பூசி ஒரு தற்காலிகத் தீர்வினை வழங்கும் என லண்டன் நிபுணர் கூறி உள்ளார்.
லண்டன் 

உலகம் முழுவதும் கொரோனா தொற்று பாதிப்பானது 4 கோடியை தாண்டி உள்ளது.  கொரோனா வைரஸை ஒழிக்க முடியாது என இங்கிலாந்தின் அவசரநிலைகளுக்கான அறிவியல் ஆலோசனைக் குழுவின் (SAGE) உறுப்பினர் ஜான் எட்மண்ட் கூறியுள்ளார். 

இங்கிலாந்தில்  கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 7.70 லட்சத்தினை தாண்டியது.  தொற்றுக்கான தடுப்பூசி தயாரிப்பு பணியில் அரசு மும்முரமாக ஈடுபட்டு வருகின்றது. இந்நிலையில் எட்மண்ட் கொரோனா தொற்று நிரந்தரமாக மனித சமூகத்தில் இருக்கும் என்றும், ஆனால் தடுப்பூசி ஒரு தற்காலிகத் தீர்வினை வழங்கும் என்றும் கூறியுள்ளார்.

தற்போதைய சூழலில் தொற்று பாதிப்பு வாய்ப்புகள் குறைக்கப்பட வேண்டும் அப்போதுதான் தடுப்பூசியை பரவலாக பயன்படுத்த முடியும் என்று தெரிவித்துள்ளார்.வெவ்வேறு கொரோனா வைரஸ் தடுப்பூசிகளில் முதலீடு செய்வதில் பிரித்தானியா புத்திசாலித்தனமாக செயல்பட்டு வருவதாகவும், தடுப்பூசி கிடைத்தால் எல்லோருக்கும் உடனடியாக அது சென்று சேரும் என்பதற்கு எவ்வித உத்தரவாதமும் இல்லையென்றும் அவர் தெரிவித்துள்ளார். 

ஆறு வெவ்வேறு கொரோனா தடுப்பூசிகளுக்கான விநியோக ஒப்பந்தங்களில் இங்கிலாந்து கையெழுத்திட்டுள்ளது, நாடு முழுவதும் 44,000க்கும் அதிகமானவர்கள் கொரோனா தொற்றால் உயிரிழந்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.


தொடர்புடைய செய்திகள்

1. தென் ஆப்பிரிக்க வீரருக்கு கொரோனா : இங்கிலாந்துடனான முதல் ஒருநாள் ஆட்டம் ஒத்திவைப்பு
தென் ஆப்பிரிக்க கிரிக்கெட் வீரர் ஒருவருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டது.
2. கொரோனா தடுப்பூசிகள் பலன் தராமல் போக வாய்ப்புகள் அதிகம் - ரஷிய விஞ்ஞானி எச்சரிக்கை
தாமாகவே இருமுறை கொரோனா பாதிப்புக்கு உள்ளாகி ஆய்வு மேற்கொண்ட ரஷிய விஞ்ஞானி ஒருவர், தடுப்பூசிகள் பலன் தராமல் போக வாய்ப்புகள் அதிகம் என எச்சரிக்கை விடுத்துள்ளார்.
3. தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான 20 ஓவர் கிரிக்கெட்: தொடரை முழுமையாக வென்றது இங்கிலாந்து
தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான 3-வது டி 20 போட்டியில் 9 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் இங்கிலாந்து அணி வெற்றி பெற்றது.
4. தமிழகத்தில் கடந்த 24 மணி நேரத்தில் மாவட்டம் வாரியாக கொரோனா பாதிப்பு விவரம்
தமிழகத்தில் கடந்த 24 மணி நேரத்தில் 1,404 பேருக்கு கொரோனா தொற்று உறுதியாகி உள்ளது.
5. கொரோனா மரண பயம் : சீனாவில் இருந்து ரகசியமாக தடுப்பூசி வரவழைத்து போட்டுக்கொண்ட வட கொரிய தலைவர்
கொரோனா பரவலால் மரண பயம் காரணமாக சீனாவில் இருந்து ரகசியமாக தடுப்பூசி வரவழைத்து வட கொரிய தலைவர் கிம் ஜாங் உன் போட்டுக்கொண்டதாக தகவல் வெளியாகியுள்ளது.